தொழில்நுட்ப வளர்ச்சியின் ஸ்மார்ட் பல்பு அறிமுகம் !

தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் இன்று அனைத்து பொருட்கள் மற்றும் தினசரி கருவிகளில் புகுத்தப்பட்டு வருகின்றது. கொசு பிடிக்கும் இயந்திரத்தில் துவங்கி

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஸ்மார்ட் பல்பு அறிமுகம் !
இன்று நம் வீட்டில் இருக்கும் பல்வேறு கருவிகளிலும் தொழில்நுட்பம் மிகவும் எளிதாக காண முடிகின்றது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் மின்விளக்கும் சேர்ந்திருக்கின்றது. வித்தியாசமாக 'ஸ்டார்ட்அப்' என்ற நிறுவனம் இந்தியாவில்  'ஸ்மார்ட் பல்பு'களை அறிமுகம் செய்திருக்கின்றது.

மொபைல் போன் செயலி மூலம் இயக்கக் கூடிய ஸ்மார்ட் பல்பு தான் ஐ.ஓ.டி.ஏ லைட். 'க்யூப் 26' எனும் இந்திய நிறுவனம் இந்த மின் விளக்கினை வெளியிட் டுள்ளது. 

இந்த ஸ்மார்ட் பல்பு சுமார் 15,000 மணி நேரம் வரை பயன் படுத்த முடியும் என்பதோடு, இந்த விளக்கு 16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் என்பதும் குறிப்பிடத் தக்கது. 
மேலும், மொபைல் போனில் அழைப்பு அல்லது குறுந்தகவல் ஏதும் வந்தால் வித்தியாசமான நிறம் மூலம் எச்சரிக்கை செய்யும்.

500 லூமென்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் 7 வாட்ஸ் பல்பு இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யப் படுகின்றது.
Tags:
Privacy and cookie settings