ஹால்மார்க் முத்திரை !

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.20 ஆயி ரத்தை தாண்டி விற்பனை யாகிறது. இவ் வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மையான மதிப்பு குறி த்து சரியாக தெரிவதில்லை.

நகைகளை வாங்கு வோருக்கு அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்ப டுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. 

இதைப் பயன்படுத்தி ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப் படுகிறது. 

இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹால்மார்க் முத்தி ரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவது சிறந்தது.

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. 

நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால் மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபா ரிகள், பதிவு செய்து கொள்ள வேண்டும். 

இவ் வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை இடப் பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.

ஐந்து முத்திரைகள்:

ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ். முத் திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹா ல்மார்க் நடுவத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்தி ரையிடப்பட்ட ஆண்டு,

நகை விற்பனை யாளரின் முத்திரை என ஐந்து முத்திரைகள் காணப்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த ஐந்து முத்திரைகள் இருக்கின் றனவா?

என்பதை சோ தித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதே னும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால் மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்து விடும்.
 
23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப் படுகிறது. 

மேலும் ஹால் மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். 

அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ.20 மட்டுமே. நகை வா ங்குவ தற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்ப ட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும். 

ஹால் மா ர்க் தங்க நகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்ப ட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளி ட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகார ம் பெற்ற நடுவங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.100.

புகார் தெரிவிக்கலாம்: ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரிய வந்தால், தொடர்புடையவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். 

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-22541442, 044-22541216 என்ற எண்க ளில் தொடர்பு கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings