முதியவர்களை தத்தெடுத்து பராமரித்து வரும் தமிழர் !

பெங்களூருவைச் சேர்ந்தவர் ராஜா. மக்கள் இவருக்கு வைத்த பெயர் ரவுடி ராஜா. சிறு வயது முதல் பிக்பாக்கெட், திருட்டு, வழிப்பறி என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அவரை பெற்றோர் கை விட்டனர்.
முதியவர்களை தத்தெடுத்து பராமரித்து வரும் தமிழர் !
இதனால் சென்னைக்கு சென்ற அவர், ஒரு குற்றத்திற்காக சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க ப்பட்டார். அவரை ஒரு முறை காவலர்கள் கடுமையாக தாக்க மயங்கி கழிவறைக்குள் கிடந்துள்ளார்.

அவரது பெற்றோர் பெங்களூரு வில் சென்று அவரை மீட்டு காப்பாற்றி யுள்ளனர். வெளியே வந்து பெரிய ரவுடியாக உருவெடுத் துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கை நடத்தி வந்த அவர், ஒரு முறை சாலையின் ஓரத்தில் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந் திருக்கிறார்.

அங்கு சென்ற ராஜா அவரை மீட்டு காப்பாற்றி யுள்ளார். அப்போது கிடைத்த இன்பம் புதியதாக இருந் துள்ளது. இதனை யடுத்து, தொடர்ந்து ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கத் தொடங்கி யுள்ளார்.

குறிப்பாக மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தான் இவரால் அதிகம் பராமரிக்கப் பட்டு வருபவர்கள். 
இதனை யறிந்த கர்நாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜாவிற்கு ஒரு ஏக்கர் நிலத்தை அளித்துள்ளார். அதில் ஆசிரம்ம் வைத்து, இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளாராம். 

இதனை யடுத்து பிரபல ஆங்கில ஊடகவியலாளர் சர்தேசாய் நடத்தி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ராஜாவிற்கு அம்பானி விருது வழங்கி கவுரவித்தார்.சச்சினும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings