சைனா மேன் யாரு? ஆஸ்திரேலியாவை மிரள வைத்தவர் !

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சைனா மேன் யாரு? ஆஸ்திரேலியாவை மிரள வைத்தவர் !
இந்தப் போட்டியில் அறிமுகமான குல்தீப் யாதவ், முதல் போட்டி யிலேயே நான்கு விக்கெட் டுகளை எடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் களை மிரள வைத்தார். 

குல்தீப் வீசும் பந்துவீச்சு ஸ்டைல் 'சைனா-மேன்' டெலிவரி என்று கூறுப் படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரபலமான பல முன்னோடி இடது கை பந்து வீச்சாளர்கள், ஆஃப்-ஸ்பின் முறையை கையாண்டாலும் ரைட்டு - ஹேண்டு பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் வீசும் பந்து லெக்- ஸ்பின்னாகத் தான் டெலி வரியாகும்.

ஆனால், இடது-கை பவுலரான குல்தீப் யாதவ், லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுகிறார். இதைப் போல் இடது-கை பவுலர்கள் அறிதினும் அறிதாகத் தான் லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுவார்கள்.

'சைனா-மேன்' சொல்லை பயன்படுத்து பவருக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 

20-ம் நூற்றாண் டின் முற்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளை யாடியவர் எல்லீஸ் ஏகான்ங் ( Ellis Achong) சீன வம்சா வளியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் நபர். 
இவர், லெக்-ஸ்பின் வீசும் இடது-கை பந்து வீச்சளராக இருந்தார். இவர் பந்து வீச்சுக்குப் பிறகே, 'சைனா-மேன்' சொல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப் பட்டது. 

எனவே, சைனா-மேன் என்பது குல்தீப் யாதவை குறிப்பிடும் பெயர் அல்ல. அது, அவர் பந்து வீசும் டெலிவரியைக் குறிப்பிடும் பெயர்.
Tags: