நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும்: ஓபிஎஸ் | Will be fine, the winnings to charity: opies !

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரங்களை பேசிய தாகவும் உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.


சென்னை வருகை தந்த ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சுமார் 15 நிமிடம் இச்சந்திப்பு நடை பெற்றது.

இச்சந்திப்பின் போது முதல்வர் ஓபிஎஸ் தமது ராஜினா மாவை வாபஸ் பெறுவது மற்றும் சட்ட சபையில் பெரும் பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப் பட்டது.

இதன் பின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியா ளர்களை சந்தித்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

அப்போது, ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்து தமிழக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை விவரங்க ளையும் விரிவாக பேசி வந்துள்ளோம்.

உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என்று மட்டும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:
Privacy and cookie settings