உண்மையான முஸ்லீம் யார்? தெரியுமா?

நபி (ஸல்) மதீனாவில் தங்கி விட்டதால் மதீனாவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தனர். சில நாட்களிலேயே நபிகளாரின் மனைவி ஸவ்தா (ரலி), தம் மகள்களை அழைத்துக் கொண்டு, அபூ பக்கர் (ரலி) அவர்களின் குடும்பத்தாருடன் மதீனா வந்தடைந்தார்கள்
உண்மையான முஸ்லீம் யார்? தெரியுமா?
நபிகளாரின் மற்றொரு மகள் ஸைனபைத் தவிர. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவும் மதீனா வந்தடைந்தார். அந்தச் சமயம் மதீனா நகரில் ஒரு நோய் பரவிக் கொண்டிருந்தது. 

அதன் காரணமாக அபூ பக்கர் (ரலி) மற்றும் பிலால் (ரலி) இருவருக்கும் காய்ச்சல் அதிகரித்தது. 

மரணம் தன்னுடைய செருப்பு வாரைவிடச் சமீபத்தில் மிக அருகில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்! என்று கவிதை கூறினார்கள் அபூ பக்கர் (ரலி) அவர்கள்.

பிலால் (ரலி) காய்ச்சல் சிறிது குறைந்ததும், தனது வேதனைக் குரலை உயர்த்தி, இத்கிர், ஜலீல் எனும் இரு புல் வகைகள் என்னைச் சூழ்ந்திருக்க, அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இரவு பொழுதை மட்டுமாவது நான் கழிப்பேனா?

மஜின்னா எனும் சுனையின் இனிப்பான நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் எனக்குத் தென்படுமா? என்ற கவிதையைக் கூறினார்.

இதை யெல்லாம் கேட்ட நபி முகம்மது (ஸல்) அவர்கள், இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கி வைப்பாயாக!
யா அல்லாஹ், எங்களுடைய உணவில் எங்களுக்குப் பரக்கத் செய்வாயாக (செல்வத்தை அதிகரிப்பாயாக) ! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கித் தருவாயாக. 

இங்குள்ள காய்ச்சலைப் போக்கி விடு! என்று மனம் உருகிப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ், நபிகளாரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் பிரார்த்தனையின்படி அந்த நோய் மதீனாவி லிருந்து வெளியேறியது.

மதீனாவின் தட்ப வெப்பத்தினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித் தோழர்கள் அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் குணமடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தூதுவத்தின் அடிப்படை நோக்கம் இஸ்லாமியச் சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்குவது தான்.

அந்த வகையில் மதீனாவாசிகள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து முறையாக நடந்து கொண்டனர். அவர்களின் குலத் தொழிலான வட்டித் தொழிலையும் துறந்தனர்.

உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கி விடும். 
அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய இறை நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும். 

அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பி யிருப்பார்கள் எனும் திருக்குர்ஆனின் வசனத்தை நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.
Tags: