பகல் நேரங்களில் கிணற்றை எட்டிப் பார்க்க கூடாது? ஏன்?

நம்முடைய வீட்டில் உள்ள பெரியோர்கள் நமக்கு சின்ன சின்ன விஷயங்க ளிலும் கூட, காரணத்தோடு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். 
பகல் நேரங்களில் கிணற்றை எட்டிப் பார்க்க கூடாது? ஏன்?
ஆனால், நாம் அதையெ ல்லாம் பொருட்படுத்த மாட்டோம். ஆனால், அவர்கள் சொல்லக் கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் 

அறிவியல் காரணங்கள் இருக்கும் என்பதை, அனுபவப் பூர்வமாக உணரும் போது தான் தெரியும். அதைப்பற்றிய ஒரு தகவலை பார்ப்போம்.

அந்த வகையில், அவர்கள் மதிய உச்சி வெயிலில் கிணற்றின் அருகில் நின்று, கிணற்றை எட்டிப் பார்க்க கூடாது என்று கூறுவார்கள்?

ஆனால், அவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? அல்லது அவர்களிடமாவது கேள்வி கேட்டதுண்டா?
கிராமப் புறங்களில் இருக்கும் ஒருசில கிணறுகளை பயன்படுத்தப் படாமல் இருக்கும். 

அவ்வாறு இருக்கும் கிணறுகளில் நச்சு காற்று மற்றும் நச்சுக் கிருமிகள் உருவாகி இருக்கும்.

மதிய வேளையில் உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும் போது, 

அந்த சூரிய ஒளியால் கிணற்றில் வெப்பமடைந்த நச்சுக் காற்று விரிவடைந்து மேலே செல்லும்.

எனவே, நாம் அந்த வெயில் நேரத்தில் கிணற்றை எட்டிப் பார்த்தால், 
கிணற்றில் இருந்து வெளி வருகின்ற நச்சுக் கலந்த வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதற்காகத் தான், 

பெரியவர்கள் உச்சி வேளையில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தி யுள்ளார்கள்.
Tags:
Privacy and cookie settings