சசிகலா உள்ளிட்டோர் சரணடைவது எப்போது?

வருமான த்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் குற்ற வாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதி மன்ற உத்தரவுப் படி இன்னமும் சரணடைய வில்லை. 
சசிகலா உள்ளிட்டோர் சரணடைவது எப்போது?
வருமான த்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்ற வாளிகள் என சசிகலா உள்ளிட்ட மூவரையும் உறுதி செய்தது உச்சநீதி மன்றம். 

அத்துடன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடை யவும் உச்சநீதி மன்றம் உத்தர விட்டது. ஆனால் மூவரும் இன்னமும் சரணடைய வில்லை. 

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூவரும் உடனே சரண டைந்திருக்கலாம். வேறு எந்த உத்தரவுக்கும் குற்றவாளிகள் காத்திருக்கத் தேவை இல்லை என்கி ன்றனர் சட்ட வல்லுநர்கள். 

அதே நேரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பானது முறைப்படி பெங்களூரு விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதை யடுத்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு விவரத்தை பட்டியலிடும். 

இப்படி விசாரணை நீதிமன்றம் பட்டியலிட்ட பின்னரும் குற்றவாளிகள் சரணடையா விட்டால் கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்படும். 
சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் மூவரும் எப்போது சரணடைய வேண்டும் என எதையும் குறிப்பிடவில்லை. 

அப்படி கால நிர்ணயம் செய்யப் படாததால் தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் பெங்களூரு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வரை காத்திருக்கலாம் என சசிகலா உள்ளிட்டோர் முடிவு செய்திருக்கலாம். 

விசாரணை நீதிமன்றம் இதுவரை எந்த உத்தர வையும் பிறப்பிக்காத நிலையில் இன்று இரவு சசிகலா சரணடைவது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings