OPSக்கு ஆதரவாக சமூக வலைதளம்... MLAக்களுக்கு போன் போட்டு நெருக்கடி !

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சசிகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேரும் பங்கேற்றனர்.

OPSக்கு ஆதரவாக சமூக வலைதளம்... MLAக்களுக்கு போன் போட்டு நெருக்கடி !
சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டிருந்தவர்கள் சொகுசு பேருந்து மூலம் பாதுகாப்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கேயே காலை உணவு கொடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்த உடன் மதிய சாப்பாடு அங்கேயே கொடுக்கப்பட்டது.

உணவு சாப்பிட்டு உடன் மீண்டும் பேருந்து மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராயப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
3 நாளுக்கு தேவையான உடைகளையும் எம்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர் செல்வம் முகாமுக்கு மாறுவதை தடுக்கவே இந்த சுற்றுலாப் பயணம் என தகவல் வெளியாகி உள்ளது.

எம்எல்ஏக்களை பாதுகாப்பாக பேருந்துகளில் அழைத்து சென்று தங்க வைப்பது முதல் அவர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கவனித்துக் கொள்கின்றனராம்.

செல்போன்களும் கடுமையான கண்காணிப்பில் உள்ளார்களாம் எம்.எல். ஏக்கள்.  

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களை அந்தந்த தொகுதி மக்கள் செல்போன் எஸ்.எம்.எஸ்கள் மூலம் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
எம்.எல்.ஏக்களின் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில், வைரலாக பரவி வருகின்றன. 

பன்னீர் செல்வத்திற்கு மக்கள் ஆதரவு உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டும், சசிகலாவுக்கு உள்ளது. எனவே மக்கள் தங்களது பலத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஹரி இதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளார். 

அவர் தனது டிவிட்டர் ஹேண்டிலில், அனைத்து தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்களையும் பகிர்ந்துள்ளார்.

இதை சமூக வலைதளவாசிகள் அதிகப் படியாக ரீடிவிட் மூலம் ஷேர் செய்து வருகிறார்கள். 

பலரும் தங்களது தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு செல்போன்களில் கால் செய்து அழைத்து பன்னீர் செல்வத் திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்த தொடங்கி யுள்ளனர்.
எம்.எல்.ஏக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமும் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். 

தங்களது மன ஓட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால் தேர்தலில் எதிர்த்து வாக்களிப்போம் என்ற எச்சரிக் கையை மக்கள் கொடுக்க ஆரம்பித் துள்ளனர்.

மக்கள் புரட்சி சசிகலா கோஷ்டிக்கு எதிராக வெடிக்க தொடங்கி யுள்ளதால் பன்னீர் செல்வம் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings