எண்ணைக் கசிவு பின்னணியில் பன்னாட்டு சதி? சில உண்மைகள்?

கடந்த சனிக்கிழமை எண்ணூர் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் எண்ணைக் கசிவு; கடற்கரை பகுதி பாதிப்பு” – இப்படித் தான் கடந்த சில நாட்களாக மீடியாக்கள் கூறுகிறது.
எண்ணைக் கசிவு பின்னணியில் பன்னாட்டு சதி? சில உண்மைகள்?
ஆனால், அவ்வளவு தான் செய்தியா? பாதுகாப்பான துறைமுகம் என்ற சர்வதேச அளவில் பெயர்பெற்ற எண்ணூர் துறைமுகத்தில் சர்வ சாதாரணமாக விபத்துக்கள் நடந்திட முடியுமா?

இந்த கேள்விக்கான விடை – மோதிக் கொண்ட இரு கப்பல்களில் ஒன்று இங்கிலாந்து நாட்டின் BW Maple என்ற கப்பல் என்பது தான். இந்த கப்பலின் என்ன அப்படி விசேஷம் என்கிறீர்களா?

இது இங்கிலாந்து ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பெட்ரோலிய டேங்கர் கப்பல். இங்கு தான் இதன் சூட்சமமே என்கிறார் சர்வதேச கப்பற்படை பற்றிய ஆய்வாளர் டாக்டர் மெர்சிடன் ஜோபர்ன்

நம் சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் தான் அறிய வகை A2 வகை மீன்கள் கிடைக்கும் என்ற உண்மை நம் பலருக்கும் தெரியாது.

ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து செல்லும் மீன்களுக்கு ஏக கிராக்கி. காரணம் – A2 புரதம்.

அதனால் தான் நம் தென்னிந்திய கரையை சுற்றியிருக்கும் நாட்டு மீன் இனத்தின் வகையை A2 என்று தான் குறிப்பிடுவர். இவை சாதாரணமாக கடல் உணவை மட்டும் உண்டு வாழ்வதில்லை.
கூவம் ஆற்றின் இயற்கை உணவை உண்டு மருத்துவ குணங்களோடு வாழும் மீன்கள் என்கிறனர் இத்தாலியின் கடல் மீன் ஆய்வாளர்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக தம் கழிவுகளை ஆற்றிலும் கடலிலும் கொட்டி ஒரு புதிய எக்கோசிஸ்டமே உண்டாக்கி வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அப்படியென்ன வினோதமான சத்து இந்த A2 புரதம்? இவை தான் இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கும் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் செயல்படும்.

இந்த தகவலை கேட்ட இலூமினாட்டிகள் ஆடிப்போயினர். அதன் பிறகு தான், American Seafoods Organization மற்றும் American Cancer Society ஆகிய நிறுவனங்கள் செயலில் இறங்கின.

வரிசையாக திட்டம் போட்டு, தமிழகத்தின் மீன்வளத்தை அழிக்க கல்பாக்கம், கூடன்குளம் அணுமின் திட்டங்களும், சேது சமுத்திர திட்டத்தையும் வரிசையாக கார்ப்பரேட் கூலியான 

இந்திய அரசிடம் சொல்லி நம் கடற்கரையில் பார்த்து பார்த்து திணித்தது. இராமேஸ்வர மீனவர்களின் எல்லை பிரச்சனை கூட இந்த பன்னாட்டு சதியே.

அதே நேரம், இந்த விஷயம் American Journal of Diabetic Association என்னும் மருந்து தயாரிக்கும் கம்பெனி கண்களையும் உறுத்தியது.
காரணம் நம் A2 மீன்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். எனவே இங்கிருக்கும் மீன்களை மொத்தமாக பெப்ஸி கோக்கை போல ஏலம் எடுத்து அள்ளி போக நினைத்தது.

அங்கு தான் சிக்கல். உள்நாட்டில் சில சதவிகிதம் விற்றாக வேண்டும் போன்ற மோடி அரசின் திடீர் கட்டுப்பாடுகள்.

இனியும் தாமதிக்க முடியாது என்றும் இங்கிலாந்து ராணியிடம் உதவி கோரலாம் என்று கடந்த ஆண்டு இறுதியில் இலூமினாட்டிகளின் ரகசிய கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

திட்டத்தின் செயலாக்கம் தான் தற்போது நம் இந்திய கப்பலில் மோதி, 22 டன் கச்சா எண்ணெயை கொட்டியது. இதில் இன்று வரை கூறப்படும் 22 டன் மிகக்குறைந்த அளவாகக் கூட இருக்கலாம்.

இப்போது இந்த கச்சா எண்ணெயில் சிக்கி இறந்த மீனை நம்மால் உண்ண முடியாது. 

தான் தயாரிக்கும் புதிய மருந்தின் ஆராய்ச்சிக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம், என்று இரட்டை சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றன பன்னாட்டு மருந்து கம்பெனிகள்.
இனி நாம் உண்ணும் மீன்களும் கூட வெளிநாட்டு இறக்குமதியாகத் தான் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். யாருக்குமே தெரியாத இந்த வெளிநாட்டு சதியை முடிந்தவரை மக்களிடம் எடுத்து சொல்வோம்.

-Dr. Raja Nagaraj MBBS, Ph. D. [Hon. Causa], MD, FRCP [London], FRCP [Edinburgh], FRCP [Glasgow], FRCPI [Dublin], FACC [USA] and FAMS – Awarded for Life Sciences Research, PRIDE OF INDIA Award from the Pacific Association of Indians in California and many more.

Reference:

Indian Fisheries Act (1897), which penalizes the killing of fish by poisoning water and by using explosives; the Environment (Protection) Act (1986), being an umbrella act containing provisions for all environment related issues affecting fisheries and aquaculture industry in India.

India also has enacted the Water (Prevention and Control of Pollution) Act (1974) and the Wild Life Protection Act (1972)

The Early Treatment of Type 2 Diabetes – The American Journal of Medicine
தோழர்களே இதுவும் சாத்தியமா?
Tags:
Privacy and cookie settings