சென்னைக்கு அருகில்... அழிந்த தன்னூத்து கிராமம் !

இயற்கை வளங்களான காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து விட்டு கல்லையும், மண்ணையும் திங்க போறீங்க" - பிரபல தமிழ் சினிமாவில் பேசப்பட்ட வசனம்.
ஆம், தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை பார்த்தால் வரும் காலங்களில் அது உண்மையாகி விடுமோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.

விடுதலைக்குப் பின்னர் உருவான பசுமைப் புரட்சியின் விளைவால் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப் பட்டன. 

அதனால் இன்று நோய் வாய்ப்பட்ட தலை முறைகள் அதிகம் உருவானது.

அதே போல், இப்போது தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி, காடுகள் அழிக்கப் படுதல், 

விவசாய நிலங்கள் குறைந்து வருதல், தொழிற் சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

மற்றும் பருவமழை பொய்த்து போதல் என பல்வேறு காரணங்களால் மறை முகமாக பாதிக்கப் படுவது விவசாயம் தான். 

விவசாயம் பாதிக்கப்ப ட்டால் நேரடியாக பாதிக்கப்படுவது மக்களாகிய நாம் தான்.

சென்ற வருடம் நிலவிய சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பருவமழை பொய்த்து, 

அண்டை மாநிலம் உரிய தண்ணீர் தராதது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் நெல் முளைத்த பூமியில் புற்கள் முளைத்துக் கிடக்கின்றன. 
இதன் எதிரொலிதான் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரிசி விலை உயர்வு.

முன்பெல்லாம் தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு உற்பத்தி நம்மிடமே இருந்தது. 

இப்போது நாம் முழுவதுமாக அண்டை மாநிலங்களை நம்பியே இருக்கிறோம்.

மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தான் உணவுத் தேவைக்காக நாம் சார்ந்திரு க்கிறோம். 

முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பின்னர் தமிழகத்தில் எந்த இடத்திலும் அணைக்கட்டு கட்டப்பட வில்லை.

எந்த அரசும் பெரிதாக நீர்நிலைகளை காக்கவோ அல்லது உருவாக்கவோ முயற்சி செய்ததாகத் தெரிய வில்லை. 

நம்மிடம் உள்ள நீர் வளத்தை விவசாயத்திற்கு பயன்படுத்து வதை தவிர்த்து மற்ற அனைத்திற்கும் பயன் படுத்திக் கொண்டி ருக்கிறோம்.

ஆம், சென்னைக்கு மிக அருகில் ஒரகடத்தில் அழகிய ப்ளாட் என்றெல்லாம் விளம்பரம் வருகிறதே 

அந்த ஒரகடம் பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
இதுவும் ஒரு வகையில் தொழிற் சாலைகளால் அபகரிக்கப் பட்ட 'தன்னூத்து' கிராமம் என சொல்லலாம். 

சென்னைக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவினை உற்பத்தி செய்வதில் முன்னனி வகித்த கிராமம் தான் ஒரகடம்.
சென்னைக்கு அருகில்... அழிந்த 'தன்னூத்து' கிராமம் !
ஒரகடத்தில் 2006-ம் ஆண்டு நிலவரப்படி, இரண்டு பட்டா நிலம் கொண்ட ஒரு பெரிய ஏரி இருந்தது. 

ஏரியை ஒட்டி ஓரமாக ஒரகடம் வாசிகளின் குடியிருப் புக்கள் அமைந்திருந்தன.

அந்த வருடம் வரையில் விவசாயம் தான் முக்கிய தொழிலாக இருந்தது. 

இனி வரப்போகும் காலங்களில் இது போல காற்றினை சுவாசிக்க மாட்டோம் என ஒரகடம் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம், அதற்குப் பின்னர் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலை நிறுவனங்கள் அரசின் உதவியோடு காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தன. 

ஏனெனில் நல்ல நீர் வளமும், போக்கு வரத்துக்கு ஏற்ற இட வசதியும் இருந்தது தான் ஓரகடத்தின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணம்.

ஶ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருங்காட்டுகோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், திருமங்கலம் என 

மொத்தம் ஐந்து கிராமங்களில் அரசின் நிறுவனமான சிப்காட்டுகள் அமைந்துள்ளன.
அதில் ஒரகடம் முழுமையாக தொழிற் சாலைகளால் ஆக்கிரமிக்கப் பட்டு விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறின. 

மேற்கண்ட 2006-ம் ஆண்டு வரை படத்திலிருந்து ஒரகடம் கிராமத்தில் இருந்த அனைத்தும் விளை நிலங்களாகவே இருந்துள்ளன.

ஆனால் 2011-ம் ஆண்டு முழுமையாக விளைநிலங்கள் எல்லாம் தொழிற் சாலைகளாக மாறி நிற்கிறது. 

பொதுவாக விவசாயத்திற்கு நாம் உபயோகிக்கும் தண்ணீரானது பயிர்களின் தேவைக்கு போக மீத தண்ணீர் பூமிக்குள் சென்று விடும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டப்படும் தொழிற் சாலைகளால் தண்ணீரானது 

ஒரு முறை உபயோகிக்கப் பட்டு பூமிக்குள் செலுத்தும் போது மாசடைந்த தண்ணீரால் நிலத்தடிநீர் பாழாவது மட்டு மல்லாமல் சுற்றியுள்ள நீராதாரங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

இதில் பெரிய சோகம் ஓரகடம் பெரிய ஏரியிலும் தற்போது ஆக்கிரமிப்புகள் இருப்பது தான். 

அனைத்து தொழிற் சாலைகளும் ஒரு சேர விரும்பும் இடம் ஒரகடம் தான். அந்த அளவிற்கு தூய்மையான நீர் வளத்தை பெற்றிருந்தது அந்த கிராமம்.

ஆனால் தண்ணீர் மாறாமல் காட்சியளித்த ஒரகடம் பெரிய ஏரி இன்று தண்ணீர் இல்லாமல் மாசுபட்டு அலங்கோல மாக காட்சி யளிக்கிறது. 

விவசாய நிலங்களாக இருந்த இடமெல்லாம், 2011-ம் ஆண்டில் தொழிற் சாலைகளாக மாறி விட்டன.

இப்படி தொழிற் சாலைகளாக மாற்ற எடுத்துக் கொண்ட வருடம் வெறும் ஐந்து வருடங்கள் தான். 

சமீபத்தில் ஒரகடத்தில் சந்தித்த நண்பர் ஒருவர் ”எங்கள் பகுதியில் விவசாயம் செய்ய மக்கள் பயிற்சி வேண்டும்” என சொல்வதாக தெரிவித்தார்.
வெறும் பத்து வருடத்தில் தொழிற் சாலைகளாக மாறி அடுத்து வந்த தலை முறைக்கு விவசாயத்தை மறக்கச் செய்து 

தொழில் துறையில் வளர்வது மட்டும் தான் உண்மையான வளர்ச்சியா என்பதற்கு 

பதில் அரசின் கையில் இல்லை, மக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.

மக்களின் அறியாமையை பயன்படுத்தியதால் தான் இன்று ஒரகடம் பகுதியானது முழுவதும் பாழ்பட்டு நிற்கிறது. 

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் 'இனி' மாறப்போவ தில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
Tags:
Privacy and cookie settings