வருடத்திற்கு 6 மாதம் திறந்திருக்கும் அதிசயக்கோயில் !

ஒரு வருடத்தில் 6 மாதம் மட்டுமே திறந்தி ருக்கும் அதிசய கோயில் ஒன்று இமயமலை அருகே அமைந் துள்ளது அனை வரையும் அதிசயத்தில் ஆழ்த்தி யுள்ளது. பத்ரிநாத் திருத்தலம்.


உத்ரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்ட த்தில் பத்ரிநாத் தாம் என்ற இடத்தில் இருக்கும் இந்த ஆலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந் ததாகும் என்று கூறப்படு கின்றது.

இத்தல இறைவன் பத்ரி நாராயணர் என்றும், தாயார் அரவிந்த வல்லி என்றும் அழைக்கப் படுகிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடிக்கு மேலே இருக்கும் இந்த இடத்திற்குச் செல்ல பல வளைவுகளை கடக்க வேண்டும் என்று கூறப்ப டுகின்றது.


மேலும் வாட்டி வதைக்கும் குளிரும் உண்டு. பத்ரிநாத் ஆலயம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே திறந்தி ருக்கும். தீபாவளியை யொட்டி நடையடைக் கப்படும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை நடை மூடப்பட் டிருக்கும்.

கோவிலை மூடும் போது, ஆலயத்தில் அதிக நெய் ஊற்றி ஒரு தீபம் ஏற்றுவார்கள்.

அந்த தீபம் கோவில் திறக்கப் படும் வரை, அதாவது ஆறு மாதம் காலம் எரிந்து கொண்டே இருக்கும். நடை அடை க்கப்படும் 6 மாதமும் தேவர்கள், பத்ரிநாரா யணரை பூஜிப்பதாக ஐதீகம்.
Tags: