அனைத்து நிறுவனங்களும் விலை குறைப்பு !

தொலைத்தொடர்பு துறையில் தமது வருகையால் பெரும் பூகம்பத்தையே உண்டாக்கியது ஜியோ.வாய்ஸ் கால் டேட்டா மெசேஜ் உள்ளிட்ட தமது எல்லா சேவைகளையும் இலவசமாக வழங்கியதின் மூலம்
அனைத்து நிறுவனங்களும் விலை குறைப்பு !
அதிகப்படியான வாடிக்கை யாளர்களை குறைந்த காலத்திலே பெற்றது பிற நேட்வொர்க்குகளின் பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் ஜியோவினை பயன்படுத்த துவங்கினர். 

அதன் இலவச சலுகைகளுக்காக. சென்ற ஆண்டின் இறுதி வரை மட்டுமே அறிவித்திருந்த தமது இலவச சலுகைகளை இந்த ஆண்டின் துவக்கத்தில் புத்தாண்டு சலுகையென பெயர்மாற்றம் செய்து மார்ச் மாதம் இறுதிவரை நீட்டிப்பு செய்தது.

ஜியோவின் இத்தகைய இலவச சலுகைகளால் பிற நெட்ஒர்க் நிறுவனங்கள் அனைத்துமே தமது வாடிக்கை யாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டி புதிய சலுகைகளை விலை குறைப்பு செய்து வழங்குகின்றன.

ஏர்டெல்:
ஏர்டெல் நிறுவனம் பிற நெட்ஒர்க் நிறுவங்களைப் போலவே தமது வாடிக்கை யாளர்களுக்கு பல புதிய சலுகைகளை விலை குறைப்பு செய்து அளிக்கிறது. அவை குறித்த விவரங்களை காணலாம்.

ப்ரீபெய்ட்:

ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தகவலின்படி ரூ.145 க்கு நாடு முழுமைக்குமான ஏர்டெல் நெட்ஒர்க் உபயோகிப் பாளர்களுக்கு மட்டும் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்

மற்றும் 300எம்பி 4ஜி டேட்டா உள்ளிட்டவைகளை பெறமுடியும்.அதே சமயத்தில் நீங்கள் 4ஜி மாடல் போன் உபயோகிப்பாளராக இருக்க விட்டால் 50எம்பி டேட்டா வை மட்டுமே பெற இயலும்.

அதே போல் ரூ.135க்கு நாடு முழுமைக்குமான ஏர்டெல் நெட்ஒர்க் உபயோகிப் பாளர்களுக்கு மட்டும் லோக்கல் மற்றும் எஸ்டிடி உள்ளிட்ட சேவைகளையும் 1ஜி பி டேட்டா வினையும் பெற இயலும்.
அதே போல் ரூ.345க்கான சலுகையில் நாடு முழுமைக்கும் எல்லா நெட்ஒர்க் நிறுவன எண்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியினையும் 1ஜிபி 4ஜி டேட்டா வசதியினையும் பெறலாம்.

போஸ்ட்பைட்:

போஸ்ட் பைட் சலுகைகள் ரூ.799க்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்,2ஜிபி டேட்டா உள்ளிட்டவற்றை பெற முடியும்.

அதுவே ரூ.1199க்கு மேற்கண்ட சலுகைகளுடன் ரோமிங் கால் வசதிகளையும் 5ஜிபி டேட்டாவையும் பெற இயலும்.

வோடபோன்:

வோடபோன் டபுள் டாட்டா சலுகை ரூ.255க்கு 2ஜிபி டேட்டாவினை பெற இயலும் நிலையான 1ஜிபி டேட்டாவுடன் மற்றும் புது ஸ்மார்ட்போன் உயோகிப் பாளர்களுக்கு 10ஜிபி டேட்டாவினை 1ஜிபி விலைக்கு வழங்குகிறது.

ரூ.144 வோடபோன்-வோடபோன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 300எம்பி 4ஜி டேட்டா ரூ.344-349 எல்லா நிறுவன எங்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்,1ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்ட சேவைகளை பெற இயலும்.

ஐடியா:
ஐடியா நிறுவனம் ரூ.148க்கு ஐடியா நிறுவன எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எம் பி டேட்டா வையும் 

ரூ.348க்கு எல்லா நெட்ஒர்க் எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா வினையும் வழங்குகிறது.

 ரிலையன்ஸ் 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.149க்கு எல்லா நெட்ஒர்க் நிறுவனங்களுக்கும் வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டா வையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல்

இனி 36 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவினைப் பெறலாம் பிஎஸ்என்எல் இல்.!
Tags:
Privacy and cookie settings