ஜெயலலிதா பிறந்த நாள்... ஓபிஎஸ், சசிகலா போட்டி !

ஜெயலலிதாவின் 6வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கு சசிகலா பெயரில் அதிமுக தலைமை அலுவலகமும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனும் போட்டி போட்டு அறிக்கை வெளியிட் டுள்ளனர்.
ஜெயலலிதா பிறந்த நாள்... ஓபிஎஸ், சசிகலா போட்டி !
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தனர். அவர் முதல்வராக ஆசைப் பட்டதால் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ளது.

அதிமுகவில் பிளவு

ஓபிஎஸ், சசிகலா அணி என இரு அணிகளாக உள்ளன. இதில் ஓபிஎஸ் அணிக்கு சென்ற அவைத் தலைவர் மதுசூதனன் கட்சியை விட்டு நீக்கப் பட்டார். 

பொன்னையன் உள்ளிட்ட பல நிர்வாகி களையும் கட்சியை விட்டு நீக்கினார் சசிகலா. ஆனால் சசிகலாவிற்கு நீக்க உரிமை யில்லை என்று கூறி மதுசூதனன் தான் தான் அவைத் தலைவர் என்றும், 

சசிகலா உள்ளிட்ட அனை வரையும் கட்சியை விட்டு நீக்குவ தாகவும் கூறி அறிவிப்பு வெளி யிட்டார்.

டிடிவி தினகரன்
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருக்கிறார். தனக்கு பதிலாக கட்சியை நிர்வாகிக்க டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்தார் சசிகலா. 

கட்சியை நிர்வகிப்ப தோடு, ஆட்சி நிர்வாக த்திலும் தலை யிடுகிறார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா பிறந்தநாள்

ஜெயலலிதா பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. இதற்காக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் அவைத் தலைவர் செங்கோட்டையன் 

தலைமையில் பிறந்த நாள் கொண்டாடப் படும் என்றும் அனைத்து நிர்வாகி களும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சசிகலா ஒப்புதலுடன் அறிக்கை

சசிகலா சிறையில் இருப்பதால் அவரது கையெழுத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில் சசிகலா ஒப்புதலுடன் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ள தாக அதிமுக தலைமை அலுவலகம் கூறியுள்ளது. 
ஜெயலலிதா பிறந்த நாள் மலரை செங்கோட்டையன் வெளி யிடுவார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மதுசூதனன் அழைப்பு

இதே போல ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிக்கை வெளியிட் டுள்ளார். அனைத்து மாவட்டங் களிலும், அனைத்து பகுதி, நகர, ஒன்றிய, 

கிளை பகுதிகளில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, ஏழை எளியோருக்கு நல உதவிகளையும், அன்ன தானமும் வழங்கி, ஜெயலலிதா வின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி யுள்ளார்.

போட்டி போட்டு கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்த நாள்... ஓபிஎஸ், சசிகலா போட்டி !
ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் லட்சக் கணக்கில் மரம் நடுவார்கள். இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளை இரு அணியினரும் மாறி மாறி உற்சாகமாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர். 

இரு அணியினரும் அழைப்பு விடுத்துள்ள தால் அன்ன தானம், நலத்திட்ட உதவிகள் என போட்டி போட்டு கொடுப்பார்கள் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings