இப்பூவுலகுக்குப் பேரொளியாய் வந்துதித்தவர் தான் எம்பெருமான் முஹம்மத் நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லமவர்கள். நெறி பிறழ்ந்து செல்லும் மக்களை நன்னெறிப்படுத்தி, 
நெருப்பில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சி !
அதள பாதாளத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கப் பெரும் பிரயத்தனம் கொண்டார்கள். அதனால் பலரினதும் கல்வீச்சுக்கும் சொல்வீச்சுக்கும் இலக்கானார். 

எனினும் அன்னார் தனது உம்மத்தின் மீது வைத்த அன்புக்கு அளவேயில்லை. நரகிலிருந்து இவ்வும்மத்தைக் காப்பாற்ற அவர் பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டார். 
மக்கள் நரகின்பால் செல்வதையும் அதைவிட்டும் அம்மக்களைக் காத்து நிற்பதையும் சிறந்ததோர் உதாரணத்தின் மூலம் நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லமவர்கள் எமக்குத் தெளிவுபடுத்து கின்றார்கள்.

எனக்கு உதாரணம் காரிருளில் ஒரு தீப்பந்தத்தை எரியவைத்த ஒரு மனிதனின் உதாரணத்தைப் போன்றதாகும்.

அவனைச் சூழ அது ஒளி விட்டுப் பிரகாசித்த போது விட்டில் பூச்சிகள் அந்நெருப்பிலே வேகமாக வந்து விழலாயின. 

அம்மனிதனோ எரியும் நெருப்பில் வீழ்வதை விட்டும் அப்பூச்சிகளைத் தடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனையும் மீறி அப்பூச்சிகள் அந்நெருப்பில் வந்து வீழ்ந்து கொண்டிருந்தன. 

என்றுவிட்டு நானோ நரக நெருப்பிலிருந்தும் உங்களைத் தடுப்பவன். நீங்களோ அதில் சென்று வீழ்பவர்களாக இருக்கின்றீர்கள். என்று நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்) 

இவ்வாறு ஓர் அழகான உதாரணத்தைக் கூறிய நபியவர்கள் ‘யார் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றாறோ 

அவர் பெரும் அழிவிலிருந்தும் அபயம் பெற்றாரென்றும் யார் தனது கூற்றைப் பொய்ப்பித்து மாறு செய்கின்றாறோ

அவரை ஆபத்து சூழ்ந்து கொள்ளும் என்று அழகியதோர் உதாரணத்தின் மூலம் விளக்குகின்றார். எனக்கும் நான் கொண்டுவந்த செய்தி(கற்)க்கும் உதாரணம் எப்படி யென்றால்

ஒரு மனிதன் அவனது சமூகத்தின் பக்கம் பதட்டத்துடன் ஓடோடி வந்து ஓ சமூகமே! இடை வழியில் நானொரு பெரும் படையைக் கண்டேன். 

அதன் அழிவிலிருந்தும் அட்டூழியத்தி லிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள் என்றான்.
சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !
அக்கிராம வாசிகளில் ஒரு கூட்டம் அம்மனிதனையும் அவனது செய்தியையும் ஏற்று அங்கிருந்து வெளியேறிச்; சென்றது. 
அப்படையின் பேரழிவி லிருந்தும் அபயம் பெற்றது. மற்றைய கூட்டம் அம்மனிதனைப் பொய்ப்பித்து அங்கேயே தங்கி விட்டது. அது அப்படையின் தாக்குதலுக் குள்ளாகி துவம்சமானது. 

என்று கூறி விட்டு யார் எனக்குக் கட்டுப்பட்டு நான் எடுத்து வந்தவற்றைப் பின் பற்று கிறார்களோ அவர்கள் தப்பித்து விட்டார்கள்.

யார் எனக்கு மாறு செய்கின்றார்களோ அவர்கள் சத்தியத்தைப் பொய்ப்பித்த வர்களாவர். என்று கூறினார்கள்.

(புகாரி,முஸ்லிம்) நரகின்பால் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி, தன்னை ஏற்று தான் ஏவியவற்றை எடுத்து வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று கூறி விட்டு, 

தான் ஏவியவற்றைப் பின்பற்றி வாழ்வது போல அவற்றைப் பிறருக்கும் எத்திவைக்கும் படி மேலுமோர் கருத்தாழமுள்ள 

உதாரணத்தின் மூலம் நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லமவர்கள் எம்மை உணர்வூட்டு கிறார்கள். 

அல்லாஹ் எனக்கு நேர் வழியையும் கல்விஞான த்தையும் தந்தனுப்பியது பெரும் வறட்சிக்குப் பின்னால் பெய்த மாமழையைப் போன்றதாகும். 

மழையைப் பெற்ற நிலத்தின் ஒரு பகுதி வளமான பகுதி. அது நீரை உள்வாங்கி புட்பூண்டு களை முளைப்பித்தது.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
அந்நிலம் தன்னிலும் பயனைடைந்து பிறருக்கும் பயனளித்தது.” “மற்றுமோர் பகுதி இறுகிப் போன கறடு முரடான பகுதி. 

அது மழை நீரைத் தன்னுள்ளீர்த்துக் கொள்ளாது பூமியின் மேலே தேக்கி வைத்தது. அதனால் அப்பூமி பயனடையாது பிற ஜீவராசிகளுக்குப் பயனளித்தது.

மிருகங்கள் அதிலிருந்து நீர் பருகின. மனிதன் அதன் மூலம் விவசாயம் செய்தான். இது, தான் பயனடையாது பிறருக்குப் பயனளித்த நிலம். 

மேலுமொரு பகுதி தட்டையான பகுதி. அது நீரை உள்வாங்கவு மில்லை, புட்பூண்டுகளை முளைப்பிக்கவு மில்லை, பிற ஜீவன்களுக்கு பயனளிக்கும் விதமாக தேக்கி வைக்கவு மில்லை. 

இது தானும் பயனடையாது பிறருக்கும் பயனளிக்காத நிலம்.” என்று கூறிவிட்டு நபியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்.

“கற்றவற்றைத் தானும் பின்பற்றி அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனு க்கு உதாரணம் முதலாம் நிலத்தைப் போன்றதாகும். 
நெருப்பில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சி !
இரண்டாவது உதாரணம் கற்றதின் மூலம் தான் பயனடையாது பிறருக்குப் பயனளிப் பவனுக்குரிய தாகும்.

தானும் பயனடையாது, பிறருக்கும் பயனளிக் காதவனுக்கு உதாரணம் மூன்றாவது நிலமாகும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
(புகாரி, முஸ்லிம்) ஆக இந்த மூன்று ஹதீஸ்களின் மூலம் நபி ஸல்லல்லாஹ  அலைஹி வஸல்லமவர்கள் எமக்கு ஒரு முக்கிய செய்தியைக் கூறுகின் றார்கள்.

அதாவது; மனிதன் நரக நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சியாக மாறும் போது அவனை அதை விட்டும் தடுக்க வேண்டும். 

அப்பணியைச் செய்ய அல்குர்ஆனையும் ஹதீஸையும் ஆயுதமாகக் கைக்கொள்ள வேண்டும்.

அவற்றிலிருந்து கற்றவற்றைத் தானும் பின்பற்றி பிறருக்கும் போதிக்க வேண்டும் என்ற அறிவுரையை எமக்குப் புகட்டு கின்றார்கள். 
எனவே “(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டம் நன்மையின்பால் அழைப்பவர் களாகவும்

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர் களாகவும் இருக்கட்டும்” (ஆலுஇம்ரான்:104) என்ற அல்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நாமனைவரும்

செயற்பட்டால் எவ்வளவு இலகுவாக தீமைகளைக் களைபிடுங்க முடியும். நன்மைகளை விதைக்க முடியும். 
அப்படி செயற்பட்டால் அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள் (ஆலுஇம்ரான்:104) என அல்லாஹ்வே கூறுகின்ற வெற்றி யாளர்கள் நாமல்லாது வேறுயாராக இருக்க முடியும்…?