நினைத்தாலும் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது... சொரப்ஜி !

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.
நினைத்தாலும் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது... சொரப்ஜி !

அதில், முதலமைச்சர் பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.


மேலும் சோலி சொராப்ஜி கூறியதாவது,

தமிழகத்தில் தற்போது வினோதமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை.

தீர்ப்பு வருவதற்கு வாரங்களோ, மாதங்களோ இல்லை. வெள்ளி அல்லது திங்களன்று தீர்ப்பு வரவிருப்பதால் காத்திருக்கலாம். நல்ல காரணங்களுக்காக ஆளுநர் பதவியேற்பை ஒத்தி வைக்கலாம்.

முதலமைச்சர் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டார். அதனை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு விட்டார். இதன் பின்னர் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings