கடனை திருப்பி தராததால் சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர் !

உயிரிழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்யப் படவிருந்த வேளையில், இறுதிக் கிரியை நடத்தும் நிறுவன மொன்றின் ஊழியர்களால் சவப் பெட்டியி லிருந்து சடலத்தை 
கடனை திருப்பி தராததால் சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர் !
பலவந்த மாக அகற்றப் பட்ட சம்பவம் ஆபிரிக்க நாடான கானாவில் இடம் பெற்றுள்ளது.

அந் நபரின் குடும்பத்தினர் குறித்த மலர்சாலை நிறுவன த்துக்கு சுமார் £27 (சுமார் 5000 இலங்கை ரூபா) கடன் பாக்கி செலுத்த வேண்டியிரு ந்தமையே இதற்கான காரணமாம்.

கடந்த சனிக்கிழமை இறுதிக் கிரியையின் போது, சவக் குழிக்குள் சடலத்தை இறக்கு வதற்குத் குடும்பத்தினர் தயாரான வேளையில், 

இறுதிக் கிரியை ஏற்பாட்டு நிறுவன ஊழியர்கள் சவப் பெட்டியை பலவந்தமாக திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.

இதனால் இறந்த நபரின் குடும்பத் தினரும் உறவினர் களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடனை திருப்பி தராததால் சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர் !
உயிரிழந்த நபரின் உறவினர் களால் தமக்கு வழங்கப்பட வேண்டிய பணம் கிடைக்கும் வரை சடலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் போவதாக உள்ளூர் ஊடகங்களிடம் மேற்படி நபர்கள் தெரிவித்தனர்.

சடலத்துக்கு ஆடை அணிவித்து தயார் படுத்தியமை முதலான வேலைகளுக்கான கட்டணத் தில் 150 கானா சேடி பணம் (150 Ghanaian Cedi - about £27) (சுமார் 5000 இலங்கை ரூபா) 

வழங்கப்பட வேண்டியு ள்ளதாக மேற்படி ஊழியர்கள் கூறியதாக இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித் துள்ளார்.

மேற்படி சடலம் உறவினர்களிடம் திரும்ப ஒப்படைப்பு

இது தொடர்பாக மேற்படி நிறுவன த்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,  “அனுதாபம் கொண்ட சிலர் இவ் விடயத்தில் தலையிட்டு எமக்கு 100 கானா சேடி (100 Ghanaian Cedi) பணத்தை வழங்கினர்.
நாம் இப் பணத்தை ஏற்றுக் கொண்டு சடலத்தை திரும்ப ஒப்படைத்தோம்” என்றார்.

எமது சேவைகளு க்காக செலுத்தப்பட வேண்டிய பணத்தை கொடுக்காமல், இறுதிக்கிரியை முடிந்தவுடன் 

நழுவிச் செல்ல முயற்சிப்ப வர்களை எச்சரிப்பத ற்காகவே இந் நடவடிக்யை நாம் மேற்கொண்டோம்” எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings