‘புடவை பேட்ச்’-ல் ஹிடன் கேமரா !

‘அந்த துர்சம்பவத்தைத் தவிர்ப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நகைகள் அணிந்து வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. ‘கல்யாணம் காட்சிக்கு நகை போட்டுட்டுப் போக வேண்டாமா?’ என்றால்… போடலாம்.

 

வீட்டில் இருந்து கிளம்பும்போது அவற்றை பத்திரமாக ஹேண்ட்பேக்கில் வைத்து, மண்டபத்துக்குச் சென்றதும் அணிந்துகொள்ளலாம். 

மாறாக, கழுத்து, கை நிறைய நகைகளை அணிந்துகொண்டு ஆட்டோ, பஸ் என்று சென்றால், பிரச்னையை விலை கொடுத்து வாங்குவதாகிவிடும்.

அடுத்தது, கொஞ்சம் நவீன முயற்சி. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் காப்பாற்ற சில ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஹிடன் கேமரா வாங்கிக்கொள்ளலாம்தானே? அதனை ‘புடவை பேட்ச்’-ல் பொருத்திவிடுங்கள். 

ஒருவேளை திருடன் உங்களை நெருங்கினாலோ, நகை பறிபோனாலோ அவனைப் பிடிப்பதும் நகையை மீட்பதும் சுலபமாகும். அடுத்ததாக, உங்கள் நகைகளை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்;

அல்லது நகைகள் அணிந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நகை கொள்ளை யடிக்கப் பட்டால், காவல் துறையினரிடம் அந்தப் புகைப் படத்தைக் காட்டும் பட்சத்தில்,

நகையை மீட்பதில் உதவியாக இருக்கும். திருடன், நகையைத் தர மறுத்தால் கொன்று விடுவதாக மிரட்டினால், தப்பிக்க வழியில்லாத போது, உயிருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!’’ என்றார் நளினி.

தமிழ்நாடு கடலோர காவல் படையின் கூடுதல் டி.ஜி.பி டாக்டர் சி.சைலேந்திர பாபு, ‘‘பெப்பர் ஸ்பிரே, சிறந்த பாதுகாப்பு ஆயுதம். பாதுகாப்பற்ற இடத்தில் ஒருவன் நெருங்கும்போது,

அவன் மிரட்டும் வரை காத்திருக்காமல், அவனை சுதாரிக்கவிடாமல் உடனடியாக பெப்பர் ஸ்பிரேயை அவன் முகத்தில் அடித்து விடுங்கள். 

முடிந்த அளவு சத்தமாகக் கத்துங்கள்; அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வருவார்கள். அவன் மிரட்டும்போது அங்கிருந்து ஓட ஆரம்பியுங்கள். ஒரு 50 மீட்டராவது கத்திக்கொண்டே தொடர்ந்து வேகமாக ஓடுங்கள்.

உண்மையில் அந்தச் சூழ்நிலையில், என்னதான் மிரட்டினாலும், மாட்டிக்கொண்டால் என்னாவது என்று அவன்தான் உங்களைவிடவும் அதிக பயத்திலும், பதற்றத்திலும் இருப்பான். அவன் பயத்தை உங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, முடிந்தால் அவனைத் தாக்கவும் செய்யுங்கள். 

தற்காப்புக் கலை பயின்ற பெண்களும், தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று ஃபிட்னஸ் பராமரிக்கும் பெண்களும், இந்தச் சூழலை இன்னும் தன்னம்பிக்கையுடன் கையாளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆட்டோ, கால்டாக்ஸி, பேருந்து, ரயில் பயணங்களிலும், இரவுப் பயணங்களிலும், தனியாகச் செல்லும்போதும் நகைகள் அணிவதைத் தவிருங்கள்!’’ – வலியுறுத்திச் சொன்னார் சைலேந்திர பாபு.
Tags:
Privacy and cookie settings