குழந்தையை கருவில் இருந்தே கண்காணிக்கும் அல்ட்ராசவுண்ட் !

அல்ட்ராசவுண்ட் என்பதை தமிழில் மீயொலி என்கிறார்கள். மனித செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலிகளைத் தான் கேட்க முடியும் என்பதால் மீயொலிதனை மனிதர்களால் கேட்க இயலாது.
குழந்தையை கருவில் இருந்தே கண்காணிக்கும் அல்ட்ராசவுண்ட் !
நாய்கள், டால்பின்கள், வௌவால்கள் போன்ற சில விலங்குகளால் மட்டுமே கேட்க முடியும். 

அப்படியான மீயொலியைக் கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிந்துக் கொள்ளவும் பயன்படுத்தப் படுகிறது, 

அந்த மருத்துவ முறையை சோனோகிராஃபி (sonography) என்கிறார்கள்.  அப்படியான ஒரு அல்ட்ராசவுண்ட் மருத்துவ பரிசோதனையின் போது கிடைத்த புகைப்படம் ஒன்று தான் தற்போதைய 'திகிலான' இன்டர்நெட் வைரல் ஆகும்..!

மில்லியன் முறை :

இம்ஜர் (Imgr) எனப்படும் அடையாளம் தெரியாத நபரால் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இந்த அல்ட்ராசவுண்ட் புகைப்படம் ஆனது இரண்டே நாட்களில் சுமார் மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

டிமோன் :

இந்த வைரல் புகைப்படத்தில் கருவில் இருக்கும் சிசுவை 'டிமோன்' (Demon) ஒன்று, அதாவது அரக்க வடிவம் கொண்ட ஒருவன் அல்லது துர்தேவதை ஒன்று அருகில் இருந்தப்படியே கண்காணிப்பது போன்று பதிவாகியுள்ளது.
குழந்தையை கருவில் இருந்தே கண்காணிக்கும் அல்ட்ராசவுண்ட் !
எட்டு முதல் பத்து வாரம் நிரம்பிய இந்த கருவின் வெளிப்புறத்தில் நிர்வாண உடலோடு ஒரு உருவம் நிற்பதை தெளிவாக காண முடிகிறது.

புத்தாண்டு :

மேலும் இந்த புகைப்படத்தை பதிவு செய்தவர் தோழி ஒருவரின் அல்ட்ராசவுண்ட் புகைப்படம், இதை நீங்கள் காணும் போது என்று எழுதி, புத்தாண்டு அன்று பதிவு செய்துள்ளார்.

கண்கள் மற்றும் கொம்பு :

இந்த புகைப்படத்தை நான்கு ஆராய்ந்தால் சிசுவின் அருகே நிற்கும் இந்த உருவத்திற்கு இரண்டு கருமையான கண்கள் மற்றும் தலையில் கொம்பு போன்ற வடிவம் இருப்பதையும் காண முடிகிறது.

வொன்டர்வுமன் :

இதை ஒரு துர்தேவதையாக மட்டும் பார்க்க கூடாது, இந்த உருவம் பார்க்க ஹாலிவுட் திரைப்பட கதாப்பாத்திரமான வொன்டர்வுமன் போலவும் தோன்றுகிறது என்பதும் நிதர்சனம் தான் !
குழந்தையை கருவில் இருந்தே கண்காணிக்கும் அல்ட்ராசவுண்ட் !
விளக்கம் :

ஆனால் இந்த போட்டோ சார்பாக அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இருந்து எந்த விதமான விளக்கமும் கிடைக்கப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings