மின்னல் வேகத்தில் போனை சார்ஜ் செய்ய?

நம்மில் பலர் பணம் கொடுத்து வாங்கும் போனை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகின்றோம். நீங்கள் செய்யும் சிறிய தவறுதான் ஆனால் எவ்வளவு நஷ்டம். பலர் போனை துடைத்து வைக்கின்றோமே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வதில்லை. 
 

முக்கியமாக சார்ஜ் செய்யும் பொழுது செய்யும் சிறிய தவறுகளால் சார்ஜ் முடிவதற்குள் போன் முடிந்து விடுகின்றது. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். 

உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் சற்று ஆறுதல் அடையுங்கள். ஏன் என்றால் உங்களை போல் பலருக்கும் இந்த பிரச்சனை உண்டு. 

ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தும் பலருக்கு இந்த பிரச்சனை உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை வேகமாக ரீசார்ஜ் செய்ய இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.

இதனால் உங்கள் ஸ்மார்ட் போன் பேடரியின் ஆயுளை நீடிக்க முடியாது என்றாலும் வேகமாக சார்ஜ் செய்ய வைக்க முடியும் .

யுஎஸ்பி கேபிளை சோதனை செய்யுங்கள்

யுஎஸ்பி கேபிள் நல்ல கேபிளாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. எப்போதும் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து வரும் கேபிளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மலிவாக கிடைக்கின்றது என்று வாங்கினால் நஷ்டம்தான்.

சரியான பவர் சப்ளை வேண்டும்

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உங்கள் கணினியை பயன்படுத்தி இருந்தால் பவர் வீக்காக இருந்தாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. 

யுஎஸ்பி கேபிள் சரியாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக இருக்காது. ப்ளக் மூலம் சார்ஜ் செய்யாமல் வயர்ல்லெஸ் மூலம் சார்ஜ் செய்தாலும் சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும்.


மோசமான அடாப்டர் வேண்டாம்

யுனிவெர்சல் சார்ஜர் அல்லது பிராண்ட் அல்லாத அடாப்டரை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்க்கவும். உங்கள் ஸ்மார்ட் போனுக்கான சார்ஜரை 

அதாவது போன் வாங்கும்போது கூடவே வரும் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏத்தவும். இவ்வாறு செய்வதால் உங்கள் போனுக்கு விரைவாக சார்ஜ் ஏத்த முடியும்.

காலம் கடந்த ஸ்மார்ட்போன் வேண்டாம்

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் காலங்கடந்த போனாக அதாவது மிகவும் பழையதாக இருந்தால் சார்ஜ் ஆக நேரமாகும். சமீபத்திய போன்கள் டர்போசார்ஜிங் திறன்களை கொண்டு வருகின்றன. உங்கள் போன் சார்ஜர் மெதுவாக சார்ஜ் ஏத்தினால் நீங்கள் டிவைசை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

மோசமான பேட்டரி வேண்டாம்

பேட்டரிகளை பற்றிய தொகுப்புகளை போன் தயாரிப்பாளர்கள் வழங்கு கின்றனர். அதை முழுமையாக படித்து உங்கள் பேட்டரி மோசமானது அதாவது ஒரிஜினல் அல்ல என்று அறிந்தால் உடனே மாற்றி விடுங்கள். 

இப்படி செய்வதால் விரைவில் சார்ஜ் ஏத்த வசதியாக இருக்கும். குறிப்பாக பழைய பாட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

சார்ஜர்

சார்ஜ் ஆகும் பொழுது போனை பயன்படுத்த வேண்டாம் சிலர் போனுக்கு சார்ஜ் ஏத்திக் கொண்டிருக்கும் போதே போனை பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. சார்ஜ் ஏறும் பொழுது போசுவதால் சார்ஜ் மெதுவாக ஏறும் அதோடு உயிருக்கு கூட ஆபத்து வரும் என்று அறிந்திருப்பீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.

செயலி

பின்னணி பயன்பாடுகளை (Background Applications) அணைத்து வைக்கவும் அதாவது போனில் மெயில். பேஸ்புக், என பல பயன்பாடுகள் இருக்கலாம். அவற்றை அணைக்காமல் சார்ஜ் ஏத்தினாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். 

ஆகவே சார்ஜ் மெதுவாக ஏறினால் உங்கள் நெட் பயன்பாடுகள் அனைத்து வைக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். இதை கடமையாக செய்யாமல் உங்கள் போனை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தாலே நன்றாக பழகி விடும்.

செட்டிங்ஸ்

பயன்படுத்தாத அமைப்புகளை (செட்டிங்ஸ்) அணைத்து வைக்கவும். சில நேரங்களில் நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தாத செட்டிங்ஸ் அதாவது வை-பை, ப்ளூடூத், 

போன்ற அமைப்புகளை அணைத்து வைக்காமல் போனை சார்ஜ் செய்தாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே செட்டிங்ஸ் அணைத்து வைக்க பட்டுள்ளதா என்று பார்த்து சார்ஜ் செய்யவும்.


ஸ்விட்ச் ஆஃப்

சார்ஜ் ஆகும் போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கவும். ஸ்மார்ட் போன் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்ய போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜில் போட வேண்டும். 

இதை விட சார்ஜை வேகமாக செய்ய நல்ல முறை கிடையாது. இதனால் சார்ஜில் இருக்கும் போது போன் வருவதையும் நாம் அதை எடுத்து பேசுவதையும் தவிர்க்க முடியுமே.

யுஎஸ்பி போர்ட் மோசமாக இருக்கலாம்

என்ன அதிர்ச்சியாக உள்ளதா. ஆமாம் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜ் போட்டால் சார்ஜ் வேகமாக நடக்கும். இதை செய்தும் மெதுவாக 

ஏறினால் உங்கள் யுஎஸ்பி போர்ட் முடிந்து விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் போனை நல்ல ஸ்மார்ட் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்து சென்று சரி செய்யவும்.
Tags: