5G யின் சின்னம் மற்றும் பெயர் !

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் நிலையில் வயர்லெஸ் கனெக்டி விட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G தான் என்றும் அதற்கான சின்னமும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
5G யின் சின்னம் மற்றும் பெயர் !
வயர்லெஸ் கனெக்டி விட்டிக்கான அடுத்த அத்தியாய த்தினை 3GPP செல்லுலார் ஸ்டான்டர்ட்ஸ் குழு உருவாக்கி வருகிறது. 

இந்த குழுவில் ஜப்பான், தென் கொரியா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. 

தற்சமயம் பன்படுத்த இயலாது என்றாலும் 2018 ஆம் ஆண்டிற்கு பின் இவை பயன் பாட்டிற்கு வழங்கப் படலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. 

இந்நிலையில் அடுத்த வயர்லெஸ் அத்தியாயம் 5G என அழைக்கப் படும் என்றும் இதற்கான சின்னமும் உருவாக்கப் பட்டுள்ளது.  5G என அழைக்கப் படுவதா லேயே இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. 

5G என பெயரிடப்பட் டுள்ளதால் இது தற்சமயம் பயன் படுத்தப்பட்டு வரும் 4G எல்டிஇ பிரான்டிங்கிற்கு அடுத்த தலைமுறை அப்கிரேடு போன்று இருக்கும் என்றே அறியப் படுகிறது.

வணிக ரீதியிலான வெளியீட்டுற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப் படும் நிலையில் 5G முற்கட்ட சிறப்பம்சங்கள் 2018 ஆம் ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது. 
புதிய பதிப்பின் முழுமையான அர்த்தம் தெரிய வில்லை என்றாலும், 5G அம்சமானது 4G போன்று அதிவேகம் வழங்காமல் அதிக திறன் கொண்டி ருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

அதிக திறன் வழங்கப்படும் போது ஸ்மார்ட் போன்களை கொண்டு இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை இயக்க ஏதுவாக இந்த தொழில்நுட்பம் வழி செய்யும் என்றும் கூறப் படுகிறது.
Tags: