சசிக்கு 4 வருஷம், எடப்பாடிக்கு 6 மாசம் : மார்கண்டேய கட்ஜூ | Sasi 4 years, 6 months to Edappadi: Katju firs !

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 4 வருட தண்டனை சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித் துள்ளார்.


திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மார்க்கண்டேய கட்ஜு செய்தியா ளர்களிடம் கூறிய தாவது; தமிழக முதல்- அமைச்சராக தேர்வு செய்யப் பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப் பட்டேன்.

6 மாசம் அவகாசம் கொடுப்போம் புதிதாக பொறுப்பே ற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்க ளுடைய செயல்பாடு குறித்து விமர்சிக்க வேண்டும்.

சசி மேல் முறையீடு செய்ய முடியாது சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல் முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதி யானது.

மறுஆய்வு மனு வேண்டு மானால் தாக்கல் செய்யலாம். பெரும் பாலான வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி தான் செய்யப் பட்டுள்ளன. சசியால் வெளியே வர முடியாது மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது.

ஆகவே சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது. இவ்வாறு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியி ருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings