ஸ்மார்ட் போன் வாங்க ஆயிரம் ரூபாய் மானியம் !

டிஜிட்டல் பரிவர்த் தனையை மேம்படுத்து வதற்கான பரிந்து ரைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 
ஸ்மார்ட் போன் வாங்க ஆயிரம் ரூபாய் மானியம் !
ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அடங்கிய முதல் வர்கள் குழு, பிரதமர் மோடியிடம் வழங்கியது.

இதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள்:

சிறு வியாபாரிகள் வங்கிகளுக்குச் செலுத்தும் மின்னணு பரிவர்த்தனைக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அல்லது மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வியாபாரி களுக்கு, முன்தேதியிட்டு வரி விதிக்கக் கூடாது. புதிய வரிவிதிப்பு களையும் அமல்படுத்தக் கூடாது.

குறைந்த வருமானம் உள்ளவர்கள், அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்த னைகளை மேற்கொண்டால், அவர்கள் செலுத்திய வருமான வரித் தொகையில் ஒரு பகுதியை திருப்பி வழங்க வேண்டும்.

ஆதார் விவரங்களின் அடிப்படையில் மின்னணு பரிவர்த்த னைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

வங்கிகளி லிருந்து ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுப்பவர் களுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் விதிப்பது அவசியம்.
வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஸ்மார்ட் போன் வாங்கும்போது ரூ.1,000 மானியமாக வழங்க வேண்டும்.

இதன் மூலம் ரொக்கமில்லா பணப் பரிவர்த் தனையை மேம்படுத்த முடியும் என்று முதல்வர்கள் குழு பரிந்துரைத் துள்ளது.
Tags:
Privacy and cookie settings