ரயிலை சேதப்படுத்தியதாக மாணவர்கள் மீது வழக்கு | Students train on the case of damaging !

ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்திட வேண்டும், பீட்டா அமைப்பினை தடை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி சேலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரைக்கால் சென்ற ரயிலை இளைஞர்கள், மாணவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக ரயிலை சிறைபிடித்த இளைஞர்கள் ரயில் செல்ல முடியாதபடி தொடர் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், ரயிலின் இன்ஜின் உள்பட பல்வேறு பகுதிகளில் சேதம் விளை வித்தனர். ரயில் பெட்டிகளில் உள்ள கண்ணாடிகள், ரயிலின் டீசல் டேங்க் ஆகியவற்றை உடைத்த தாகவும் கூறப் படுகிறது.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பு போராட்ட த்தில் ஈடுபட்ட வர்களை வலுக்கட்டா யமாக வெளியேற்றி, ரயிலை அங்கிருந்து மீட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து ரயிலின் சேதம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், போரட்டக் காரர்களால் சுமார் 2 கோடி ரூபாய் வரை சேதமடைந்து உள்ளதாக கணக் கிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரயிலை சேதப்படுத்தியதாக சிவக்குமார், மணி, அரவிந்த் மற்றும் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரயில்வே காவல்துறையினரின் சார்பில் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது சேலம் மாநகர காவல் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் 147, 174, 150 ( 1 ) , 151 ஆகிய பிரிவின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் 147 பிரிவின் கீழ் என ஐந்து பிரிவின் கீழ் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சேலம் மாநகர காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடைபெற்று வந்த சமயத்தில் காவல் துறையினரால் வீடியோ பதிவு செய்யப் பட்டதை கண்காணித்து, அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது.

இதற்கென ஐந்து காவல் ஆய்வா ளர்களை கொண்ட ஐந்து தனிப் படைகள் அமைக்க ப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட் டவர்கள் கைது செய்யப் படலாம் என்பதால் சேலத்தில் பரபரப்பு அதிகரித்து உள்ளது.
Tags:
Privacy and cookie settings