மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கூழாங்கற்கள்?

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் என்ற இடத்தில் அரசு சித்த மருத்துவ மனை உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு செல்லும் நடைபாதை கூழாங் கற்களால் அமைக்கப் பட்டது. 

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கூழாங்கற்கள்?
இந்த பாதைக்கு ‘வர்ம நடை பாதை’ என்று மருத்துவ மனை ஊழியர்கள் கூறுகின்றனர்.,
இந்த வர்ம பாதையில் நோயாளிகள் நடந்து செருப்பு இல்லாமல் வெறும் காலில் சிறிது நேரம் நடந்தால், 

உயர் ரத்த அழுத்தம், தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்து வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அக்குபஞ்சர் மருத்துவத்தின் ஒரு பகுதிதான் இந்த கூழாங்கற்கள் நடைபாதை. 

இது குறித்து ஆண்டியப் பனூர் சித்த மருத்துவப் பிரிவு முதன்மை மருத்துவர் விக்ரம் குமார் கூறும் போது, “வர்ம மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தில் முக்கிய அங்கம் வகிப்பதாகும். 
சித்த மருத்துவ கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்து வத்தின் அடிப்படையில் இந்த வர்ம பாதை சித்தா மருத்துவப் பிரிவில் அமைக்கப் பட்டுள்ளது. 
மனித உடல் முழுவதும் பல வர்ம புள்ளிகள் உள்ளன. அந்த வர்ம புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டு வதன் மூலம், பல வகையான நோய்களைக் கட்டுப் படுத்தலாம். 

பழங்கால யுத்தங்களின் போது அடிபட்ட வீரர்களுக்கு முதல் உதவி மருத்துவமாக வர்மம் இருந்துள்ளது.
கால் பாதங்களில் பல வர்ம புள்ளிகள் உள்ளன. அந்த வர்ம புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் சில நோய்களைத் தடுக்கலாம், சிலவற்றைக் கட்டுப் படுத்தலாம் என்பது சித்தர்களின் கண்டுபிடிப்பு.
இந்த அறிவியலை அடிப் படையாகக் கொண்டு, குறிப் பிட்ட நோயாளிகளைத் தேர்ந் தெடுத்து வர்ம நடை பாதையில் நடக்க அறிவுறுத்தி யுள்ளோம்.
Tags: