மோட்டார் இன்ஷூரன்ஸ்.. எதற்கெல்லாம் இழப்பீடு இல்லை?

எதை எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்கும், கிடைக்காது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு, 
அதற்கு ஏற்ப செயல்படுவது ஒன்றே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதன் லாபத்தை முழுமையாகப் பெற உதவும்.

இதர உபயோகம்: 


தனி நபர் வாகன பாலிஸியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.

அந்த வாகனத்தை வாடகை டாக்ஸியாக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகப் பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு இழப்பீடு கோரினால் எதுவும் கிடைக்காது. 

ஓட்டுநர் உரிமம்: 

வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான

மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், இழப்பீடு கிடைக்காது. 

மது/போதை மருந்து பயன்பாடு: 

வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு

அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் இழப்பீடு இல்லை. 

பிரேக் டவுண்: 

வாகனம் பிரேக் டவுண் ஆனால் இழப்பீடு இல்லை. டயர் சேதம் அடைந்தால்: டயருக்கு மட்டும் தனியே சேதம் ஏற்பட்டால் இழப்பீடு இல்லை.

அதே நேரத்தில், வாகனம் சேதம் அடையும் போது டயரும் பாதிக்கப் பட்டால் இழப்பீடு உண்டு.
 
தேய்மானம்: 

நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு இழப்பீடு இல்லை. 

விபத்து எல்லை: 


விபத்தானது இந்திய நாட்டின் எல்லைக்கு வெளியே நடந்தால் இழப்பீடு கிடைக்காது. 

போர் காலத்தில்: 

போர் நடக்கும் பகுதிகளில் இந்த பாலிஸியால் பலன் இல்லை. 

தற்கொலைத் திட்டம்: 

உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை எண்ணத்துடன் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால், இழப்பீடு இல்லை. வழக்கமான 

பராமரிப்பு: 

வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவுகளுக்கு கிளைம் கிடையாது.
 
வயது முக்கியம்: 

வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால் இழப்பீடு இல்லை. பழகுநர் உரிமம் பெற்றவர்

ஓட்டி வாகனம் விபத்துக்குள்ளா னால், உடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்திருந்தால் தான் இழப்பீடு கிடைக்கும்.
Tags:
Privacy and cookie settings