மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !





மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
மாரடைப்பு க்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதை யடுத்து, செயல் முறை மூலமும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 
மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !
இது இரண்டு வகைப்படும். 

1) ஆன்ஜியோ பிளாஸ்டி 

2) பைபாஸ் அறுவை சிகிச்சை. ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன? ஆன்ஜியோ கிராம் செய்வது போலவே இருதய ரத்தக் குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, 

அதன் வழியாக எளிதாக அடைப்பை சரி செய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவை யில்லை.
ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது? 
ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப் படுகிறது. 

வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, 

அதன் நுனிப்பகுதி பாதிக்கப் பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்ப பகுதியில் நிறுத்தப் படுகிறது. 

அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப் பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப் படுகிறது. 

இதற்கு வழிகாட்டி இழை என்று பெயர். இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான 

சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப் பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப் படுகிறது. 
இப்போது அந்த பலூனை விரி வடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக் குழாயின் தசை சுவர்களு க்குள் அழுத்தப் படுகிறது.

ரத்தக் குழாயின் வழி அகலப் படுத்தப் படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப் பட்டு ரத்தக் குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்ப டுகிறது. 
இச்செய்முறை யால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப் படுகிறது. 

அகலப் படுத்தப் பட்ட ரத்தக் குழாய் மீண்டும் சுருங்கி அடை படாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, 

பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற “உலோக வலை’ (Stent) அவ்விடத்தில் பொருத்தப் படுகிறது. 
இந்த உலோக வலை இரு வகைப்படும். 

1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent), 

2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent). 

மருந்து தடவப்பட்ட உலோக வலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையை விட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது. 
மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை !
எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலைதான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை. 

இதய ரத்தக் குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். 
மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவ மனை வருவோருக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச் சிறந்ததாகும். 
மேலும் சிலவகை மாரடைப்பு க்கு ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து தர முடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறை தான் உகந்ததாக இருக்கும். 

இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.
Tags: