கருணாநிதிக்கு நோய் தொற்று.. யாரும் பார்க்க வர வேண்டாம் !

திமுக தலைவர் கருணாநிதி எழுந்து நடக்க முடியாமல் தானாகவே எதுவும் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
கருணாநிதிக்கு நோய் தொற்று.. யாரும் பார்க்க வர வேண்டாம் !
வயதான அவர் ஒவ்வாமை, நீர் சத்து குறைவு உள்ளிட்ட நோய்களுக்காக கடந்த 1ம்தேதி சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அன்று முதல் திமுகவின் தூணாக விளங்கிய கோ.சி.மணி மருத்துவ மனையிலேயே இறந்தார். கடந்த 5ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வரு மான ஜெயலலிதா இறந்தார். 

அதன் பின்பு அதே மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட பத்திரிக்கை ஆசிரியர் சோ.ராமசாமி இறந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தார்.
மருத்துவ மனையில் இருக்கும் போதும் யாரும் பார்க்க வர வேண்டாம் என்று திமுகவால் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கருணாநிதியையும் நோய் தொற்று அபாயம் உள்ளதால் யாரும் பார்க்க வரவேண்டாம் என்று திமுக கூறியுள்ளது.
Tags:
Privacy and cookie settings