தன் தாய்ப்பாலைத் தானமாக கொடுத்த தாய் !

பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை இறந்து விட்டால், அந்தத் தாயின் வேதனை எப்படி இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வருடங்கள் ஆகும். 
ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வெண்டி க்ரூஸ்சான் என்ற பெண், தான் பெற்ற குழந்தை இறந்து விட்டதால் தனது தாய்ப் பாலை மற்ற குழந்தைகளுக்குத் தந்து உதவி, தாயின் பேரன்பைப் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

சமீபத்தில் வெண்டி க்ரூஸ்சான், மருத்துவ மனையில் ஓர் ஆண் குழந்தை யைப் பெற்றெடுத்தார். ஆனால், அந்தக் குழந்தை எதிர் பாராத விதமாக பிறந்த உடனே இறந்து விட்டது.

தன் குழந்தை இறந்த சோகத்தி லிருந்து மீண்டு, மூன்று நாட்களி லேயே சாதாரண நிலமைக்குத் திரும்பி, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தனது பாலைத் தந்து உதவத் தீர்மானித்தார்.

உடனே, தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும் குழந்தை களை மருத்துவமனை மூலம் தெரிந்துக் கொண்டு, தனது பாலை கவர்களில் பம்ப் செய்து நிரப்பி, அந்தக் குழந்தை களுக்குக் கொடுத் துள்ளார். 
இப்படி மூன்று மாதங்களில் ஆறு குழந்தைகளுக்கு உதவி வந்த வெண்டி, இது வரை 59 லிட்டர் பால் கொடுத்து உதவியிருக்கிறார். 

சில நேரங்களில், மூன்று அல்லது நான்கு மணி நேரம் குழந்தைகளுக்கு பால் தேவைப்படும். அப்போது, மிகுந்த சிரமத்துக்குள்ளானேன் என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைத் தனது ஃபேஸ்புக் வலை தளத்தில் போட்டோவுடன் தெரிவித்துள்ளார். 

வெண்டி க்ரூஸ் சானின் நல்ல உள்ளத்தைக் கண்டு நெட்டிசன்கள் வெண்டியை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனப் புகழ்ந்து வருகிறார்கள். 
தான் மறுபடியும் கர்ப்பம் ஆக வேண்டும் என விருப்புவதாகவும், அதனால் தற்போது பால் கொடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தாயன் பின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டிய வெண்டியை நாமும் பாராட்டுவோம்.
Tags: