நிம்மதி இழந்த கலைஞர் !

அப்படி தான் சொல்கிறது அந்த புலனாய்வு வார இதழ். கலைஞர் உடலில் கொப்புளங்கள் தோன்றி வீட்டில் முடங்கிய இந்த ஒரு மாத காலத்தில் குடும்பத்தினரின் நிலைப்பாடு மிகவும் குழப்பம் நிறைந்து காணப் பட்டது.
நிம்மதி இழந்த கலைஞர் !
சொத்து, பதவி..அறக்கட்டளை..அடுத்த தலைவர் யார்..? யார் யாருக்கு என்ன பதவிகள் போன்ற கடும் போராட்டங்கள் நடந்தது என்கிறார்கள்.

கலைஞர் பேசும் திறனையும் இழந்தார். அவர் பேசுவதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் ராசாத்தியம்மாள் நிலை இன்னும் பரிதாபம். கணவரை பார்க்க கூட போராட வேண்டிய சூழல்.

கலைஞர் கடந்த வாரம் மருத்துவ மனையில் இருந்து திரும்பி வந்த போது இன்னும் பயந்து விட்டனர் குடும்பத்தினர்.

இனி என்ன ஆகும்..? ஒரு வேளை.. அப்படி ஏதும் ஆகி விட்டால்..! ஆக கலைஞரிடம் பல கோரிக்கைகளோடு மல்லுக்கு நின்றனர் குடும்பத்தினர்..!
தலைவர் பதவி பற்றியும் கேட்ட போது முடியாத சூழ் நிலையிலும் பதவியை விட்டுத் தர மாட்டேன் என்று குழந்தை போல அடம் பிடித்தாராம்.

இதற்கும் சண்டை நடந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் முற்றிலும் மன நிம்மதியை இழந்து தவித்தார் என்கிறது அந்த வார இதழ்.

நேற்று முன்தினமும் கடும் வாக்கு வாதங்கள் நடக்க, கடுமையாக மன உளைச்சளுக்கு ஆளான கலைஞர், அதன் பின் மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம்.

சோகமாகவே இருந்த கலைஞருக்கு நேற்று சுவாசக் கோளாறும் மயக்கமும் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்…!
அதெல்லாம் ஒன்றும் இல்லை தலைவா..நீங்கள் மீண்டும் வருவீர்கள்…எங்களை வழி நடத்துவீர்கள் என்கிறான் தொண்டன்..!
Tags: