டார்வினின் பரிணாமத்துக்கு சவால் விடும் மரங்கொத்திப் பறவை !

சார்ள்ஸ் டாவினின் பரிணாம வாதத்துக்குச் சவால் விடும் மற்று மோர் படைப்பு தான் மரங்கொத்திப் பறவை (wood pecker) 
இதன் அன்றாடச் செயற்பாடுகளும் உடற்கட்டமைப்பும் கொண்டுள்ள அற்புதங்கள் எமக்கு அல்லாஹ்வை ஞாபகிக்கின்றன.  

எனவே இப்பறவை யைப் பற்றி சற்று அறிந்து கொள்வோம்.

இவற்றின் பிரதான தொழில் மரம் கொத்து வதாகும். மரத்திலி லுள்ள பூச்சி, புழுக்களை உட்கொள் வதற்கே இவை மரத்தைக் கொத்து கின்றன.

மேலும் தமது வாழிடத்தை அமைத்துக் கொள்வதற்கும் இவ்வாறு செய்கின்றன. அதிகமான மரங்கொத்திகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை.

ஆண் பறவையின் தலையில் சிவப்பு நிறச்சிறகுகள் காணப்படுகின்றன. உலகில் மொத்தம் 200 வகை மரங்கொத்திகள் காணப்படுகின்றன. இவை அளவிலும் நிறத்திலும் ஒன்றுக் கொன்று வேறுபட்டவை. 
இவை மரத்தைக் கொத்தப் பயன்படுத்தும் முறை மிகவும் விசித்திரமானது. இச்செயன் முறையின் போது இவை தமது கூர்மையான அலகைக் கொத்தவும் பாத நகங்களை உறுதியாக மரத்தைப் பற்றிப் பிடிக்கவும் 

வாலை சமநிலையாக நிற்க ஆதாரமாகவும் பயன் படுத்துகின்றன. மரங் கொத்தியின் பாதத்தின் முன்னால் இரண்டு விரல்களும் பின்னால் இரண்டு விரல்களும் காணப்படுகின்றன. 
இது ஏனைய பறவைகளிலிருந்தும் வித்தியாசமான தொரு கட்டமைப்பாகும். இந்த விரல்களால் மரத்தைப் பற்றிக் கொண்டு கீழே விழுந்து விடாமல் மரத்தின் மேலும் கீழுமாக அவற்றால் நகர முடியும். 

மரத்தைப் பற்றியதன் பின்பு மரத்தைக் கொத்த ஆரம்பிக்கின்றன. ஒரு மரங் கொத்தி சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் தடைவைகள் மரங்களைக் கொத்துகின்றது. 

ஒரு செக்கனுக்கு இதனால் 20 முறைகள் கொத்த முடியும். எவ்வளவு வேகமாகக் கொத்துகின்றது என்று பார்தீர்களா? இதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? முடியாது. 

அது தான் ஒவ்வொரு படைப்பிற்கும் தேவையானதை அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். 

இவ்வாறு துரிதமாக இயங்கும் போது அதன் மண்டையோடு ஏதும் பாதிப்புக் களுக்கு உட்படாத வகையில் தலையில் உள்ள தசைகள் அதனைப் பாதுககா க்கின்றன.

மரங்களைக் கொத்தி தமது உணவைப் பெற்றுக் கொள்வதோடு கூடுகளையும் அமைத்துக் கொள்கின்றன இப்பறவைகள். 
டார்வினின் பரிணாமத்துக்கு சவால் விடும் மரங்கொத்திப் பறவை !
பாதுகாப்பான இடத்திலும் உறுதியான மரங்களின் உச்சியிலும் தமது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. அனேகமான பறவைகள் மரப்பொந்துகளில் கூடுகளை அமைக்கும் போது ஒரு நுழை வாயிலை மாத்திரமே அமைக்கின்றன 

ஆனால் மரங்கொத்திகள் தமது தற்பாது காப்பிற்காக இரண்டு வாயில்களை அமைத்துக் கொள்கின்றன. ஒரு வாயிலால் ஏதும் எதிரி விலங்குகள் வந்தால் இரண்டாவது வாயிலால் அது தப்பிதது விடும்.

ஒரு பறவை மற்றப் பறவை களுடன் தகவல்களைப் பறிமாற்றிக் கொள்ளவும் தமக்கு எதிகளி டமிருந்து ஆபத்து ஏற்படும் போது தம்மைப் பாது காத்துக் கொள்ளவும் 

மரங்களைக் கொத்துவதன் மூலம் ஓசை எழுப்புகின்றன. இவற்றின் தொடர்பாட லுக்காக அல்லாஹ் இவற்றுக்கு வழங்கி யிருக்கும் மிக அற்புதமான நுட்பமே இதுவாகும்.

இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம் தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகை விட ஐந்து மடங்கு நீண்ட தாகும். கறையான் எறும்பு போன்ற வற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழு வழுப்பான ஒட்டும் தன்மை வாய்ந்த ஒரு வகைத்திரவம் காணப்படுகின்றது.

எனவே இதன் மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக் கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்து வராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டை யோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது.

எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும் போது நீளமாகும். பூச்சி புழுக்களல்லாது பழங்கள், விதைகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் பறவைகளும் உள்ளன.

ஒரு பெண் பறவை இரண்டு முதல் எட்டு வரையான வெள்ளை நிற முட்டைகளை ஒரே தடைவையில் இடுகின்றது.
டார்வினின் பரிணாமத்துக்கு சவால் விடும் மரங்கொத்திப் பறவை !
இது வரை நாம் பார்த்த இப்பறவையின் நுணுக்கங்கள் எல்லாம் படிப் படியாகப் பரிணாமமடைந்து வந்திருப்ப தென்பது அசாத்தியத்திலும் அசாத்தியமானதே!

பண்டைய காலப்படிமங்கள் கூட இம்மரங்கொத்திப் பறவை 25 மில்லியன் வருட காலம் பழைமையான தென உறுதிப் படுத்துகின்றன. ஆக அன்றிருந்த பறவை தான் இன்றும் உள்ளது.
இவை யாவற்றினதும் படைப்பாளன் வல்ல நாயன் அல்லாஹ் வேயன்றி வேறு யாராக இருக்க முடியும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
Tags: