குளிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் !

கடந்த 2008-ம் ஆண்டு எஸ்.சி.எ (Svenska Cellulosa Aktiebolaget - SCA) எனும் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரே லியர்கள் தான் நமது உலகி லேயே சுத்தமா னவர்கள் என அறியப் பட்டது.
குளிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் !

பொதுவா கவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதார மான செயலாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது.

காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது தான் சுகாதாரம் என கருது வோரும் உண்டு.
ஆனால், அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மேலும், சிலர் தினமும் குளிக்க கூடாது, சிலர் ஒருவேளை கூட குளிப்பதை தவிர்க்க கூடாது.

இனி, குளிப்பது சார்ந்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷ யங்கள்

இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் 1000 வகையி லான பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. 
கதவில் கைப் பிடியில் ஆரம்பித்து, குப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நாமே அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படு கின்றன.

இதில் சில வகை பாக்டீரி யாக்கள் நமது உடலுக்கு நன்மை யையும் விளை விக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

நமது உடலே தானாக ஆண்டிமைக் ரோபயல் களை தயாரிக் கிறது. இவை தீய தாக்கத்தை உண்டாக்கும் நுண்ணு யிரிகளை அழிக்கும் திறன் கொண்டிருக் கின்றன.
குளிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் !

நம் உடலில் அன்றாடம் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க நாம் தினமும் குளிக்க வேண்டும். இது ஒரு வகையில் நமது உடலுக்கு நாமே செய்யும் உதவி ஆகும். இதனால் நமது உடலை இயற்கை யாக வலுப் படுத்த முடிகிறது.

பெரு ம்பாலும் முகத்திற்கு தேய்த்து குளிக்கும் போது, பலரும் கண்களை சுற்றியும், காதுகளின் இடுக்கு களிலும், மூக்கு பகுதியிலும் சரியாக தேய்த்து குளிப்பது இல்லை. 
இந்த பகுதிகளில் பாக்டீரி யாக்கள் அதிகமாக தேங்கும். எனவே, முகம் தேய்த்து குளிக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.

சிலர் வியர்வை அதிகமாக வரவில்லை எனில், குளிர் காலங்களில் ஒரு நாள் குளிப்பதை தவிர்ப் பார்கள். ஆனால், இது முற் றிலும் தவறு. வியர்வை சுரக்க வில்லை எனிலும் கூட உடலில் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தாக்கம் ஏற்படும்.

எனவே, குளிர் காலமாக இருப்பினும் தினமும் குளிக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் தினமும் குளிக்க வில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து விடும், சருமத்தின் மேற்பு றத்தில் உப்பு திட்டு போன்று உரு வாகும்.

இவை, சருமத்தின் நலனை கெடுப்பவை ஆகும். இதனால், சரும தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக் கின்றன.
குளிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் !

உடல்நிலை சரியி ல்லாமல் போனாலும் கூட, இதமான நீரை கொண்டு, அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் துடைத்து விட வே ண்டியது அவசியம்.

இந்த இட ங்களில் தான் அதிகமாக பாக் டீரியா தாக்கம் ஏற்படும் என சரும நிபுண ர்கள் கூறுகின்றனர்.
ஓ.பி.வி. (OPV) சொட்டு மருந்து - குழந்தை பிறந்தவுடன் !
சிலர் கூந்தலை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்கிறேன் என தினமும் தலைக்கு குளிப் பார்கள். இது தவறான அணுகு முறை. இதனால், முடி அதிகமாக உதிர தான் செய்யும்.

மேலும், கெமிக்கல் கலப்பு உள்ள ஷாம்பூ கூந்தலின் ஆரோக் கியத்தை மெல்ல, மெல்ல சீர்கெடுக்கும்.
Tags: