கிடப்பில் போடப்பட்ட விமான நிலைய ஓடுதளப் பணிகள் !

திருச்சி விமான ஓடுதள நீட்டிப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், விமான நிலைய த்துக்கு வர வேண்டிய வருமானம் பாதிக்கப் பட்டுள்ளது.
கிடப்பில் போடப்பட்ட விமான நிலைய ஓடுதளப் பணிகள் !
அத்துடன், மண்டலத்தில் உள்ள சுமார் 10 மாவட்டப் பகுதிகளில் வேலை வாய்ப்பு, வர்த்தகம் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளன.

திருச்சி விமான நிலையத் துக்கு மத்திய அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச அந்தஸ்தை வழங்கியது. ஆனால், சர்வதேச விமான நிலையத் துக்குத் தேவையான ஓடுதளம் திருச்சி விமான நிலையத்தில் இல்லை. 

இதன் நீட்டிப்புப் பணிகளும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதனால், திருச்சி மட்டுமன்றி, சுற்றுப்புற மாவட்டங் களிலும் பல்வேறு துறைகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம் ஓடுதளம் நீட்டிக்கப் படாத காரணத்தால், இந்த விமான நிலையத்துக்கு வர வேண்டிய வருவாய் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்க ளுக்குச் செல்கின்றன.

இந்தியா வில் உள்ள 17 சர்வதேச விமான நிலைய ங்கள் மூலம் தினசரி சராசரியாக 1.40 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். 
இவர்களில் 50 சதவீதம் (70,000) பேர் வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அவற்றின் வழியாக வேறு நாடுகளுக்கோ பயணிக்கின்றனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை தவிர வளைகுடா நாடுகளில் துபைக்கு ஒன்று, சார்ஜாவுக்கு ஒன்று என நாளொன் றுக்கு இரு முறை மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப் பட்டு வருகின்றன.

திருச்சியி லிருந்து இயக்கப்பட்ட சார்ஜா விமானம் கடந்த 9 ஆண்டுக ளுக்கு முன்பு (அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ்) நிறுத்தப் பட்டது. பின்னர், கடந்த செப்டம்பர் 14-ம் தேதியி லிருந்து தான் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளி லிருந்து திருச்சிக்கு விமானப் போக்கு வரத்து தொடங்க பல்வேறு நாடுகள் தயாராக இருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களு க்காக மத்திய அரசு அனுமதி யளிக்க வில்லை 

எனக் கூறப்படுகிறது. ஆனால், பிற (15-க்கும் மேற்பட்ட சர்வதேச) விமான நிலையங்க ளிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப் பட்டு வருகின்றன. 
இந்தியாவின் பன்னாட்டு விமானப் போக்கு வரத்தில் தமிழகம் 15 சதவீத பங்களிப்பைத் தான் அளித்து வருகிறது. இதற்குக் காரணம், பன்னாட்டு விமானங் கள் மிக மிகக் குறைவு என்பது தான். 

அதிலும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு மிகவும் குறைவு. இதனால், தமிழக த்தைச் சேர்ந்த பயணி களில் குறைந்த பட்சம் 20 சதவீதம் பேர் பெங்களூரு தனியார் விமான நிலையத்தைப் பயன் படுத்து கின்றனர். 

கடந்த 2015-16-ஆம் ஆண்டில் அந்த விமான நிலையம் வழியாக 33,66,170 பேர் பயணித்து ள்ளனர். 

தனியார் விமான நிலையங் களைப் பயன் படுத்தும் பயணி ஒருவர் நிலைய சேவை, பராமரிப்புக் கட்டணமாக விமான டிக்கெட் கட்டணத் துடன் கூடுதலாக ரூ. 2000 வரை செலுத்த நேரிடுகிறது. 

ஆனால், அரசு விமான நிலையங் களில் ரு. 520 மட்டுமே சேவைக் கட்டண மாகும். அந்த வகையில், பயணி ஒருவருக்கு ரூ. 1,500 மிச்சமா கிறது. 

வருகை, புறப்பாடு என இரண்டும் சேர்த்து சராசரி யாக தினசரி 10 ஆயிரம் பயணிகள் தனியார் விமான நிலையம் வழியாகப் பயணிக்கும் பட்சத்தில் அதற்கு, நாள்தோறும் சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
திருச்சி சர்வதேச விமான நிலயம் வழியாக வளைகுடா நாடுகளுக்கு விமானங் கள் இயக்கப் பட்டால், பெங்களூரு தனியார் விமான நிலையத்துக்குச் செல்லும் இந்த வருவாய் திருச்சி விமான நிலையத்துக்கு கிடைக்கும்.

இதே போல, கேரள மாநிலத் தின் கொச்சி விமான நிலைய த்தை 46,53,948 பேர் பயன் படுத்தி யுள்ளனர். இது மொத்தப் பயன் பாட்டில் 10- 15 சதவீத மாகும்.

கேரளத்தின் திருவனந்த புரம் விமான நிலைய த்தை 22,17,473 பன்னாட்டு பயணிகள் பயன் படுத்தி யுள்ளனர். 

இவர்களிலும் 20- 25 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தைப் பயன் படுத்த வேண்டிய சுமார் 15- 20 லட்சம் (பன்னாட்டு) 

பயணிகள் பெங்களூரு, கொச்சி, திருவனந்த புரம் விமான நிலையங்களைப் பயன் படுத்தி யுள்ளனர். இதுதவிர, சரக்குப் போக்குவர த்துக்கும் வெளிமாநில விமான நிலையங்க ளுக்குச் செல்லும் நிலை உள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்து க்கு வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங் களின் சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
திருச்சி விமான நிலைய த்தின் ஓடுதளம் 6,000 அடியாக இருந்து கடந்த 2004-ஆம் ஆண்டு 8,136 அடி நீளத்து க்கு நீட்டிக்கப் பட்டது. 

தற்போது அதை மேலும் 12,500 அடி நீளத்துக்கு நீட்டிக்க திட்ட மிடப்பட்டு, நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளது.

குறைந்த பட்சம் 10,000 அடி நீளமாவது ஓடுதளம் இருந்தால் தான் பெரிய ரக விமானங்களும், சரக்கு விமானங்களும் தரையிறங்க முடியும் என்பதால், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் திருச்சியில் கால் பதிக்கத் தயங்கு கின்றன.

ஓடுதளத்து க்கு தேவைப்படும் நிலம் மொத்தம் 510 ஏக்கர். இதில், அரசு மற்றும் ராணுவ நிலம் 164 ஏக்கர் போக, எஞ்சியுள்ள 346 ஏக்கர் நிலத்தைக் கையகப் படுத்த வேண்டி யுள்ளது. 
இவற்றில் தரிசு நிலங்களும், விவசாய நிலங்களும், குடியிருப் புகளும் அடக்கம். ராணுவ இடத்தை அளிப்ப தற்கான அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது. 

எஞ்சிய 346 ஏக்கர் நிலம் தான் பிரச்னையாக உள்ளது..... நன்றி: தினமணி.
Tags:
Privacy and cookie settings