ஏழு மொழிகளில் பேசும் மழலை !

ரஷ்யாவில் நான்கு வயதான குட்டிப் பெண் பெல்லா உலகின் வெவ்வேறு பகுதிக ளில் பேசப்படும் 7 மொழி களில் பேசி அனை வரையும் கவர்ந் துள்ளார். 
அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங் களில் வைரலாக பரவி வருகிறது. 

ரஷ்யாவின் மாஸ்கோ வில் வசிக்கும் பெல்லா தேவ்யாட்கினா என்னும் 4 வயது குழந்தை ஏழு மொழி களில் சரளமாக பேசி அனைவ ரையும் ஆச்சிரியத்தில் மூழ்க வைத்து ள்ளார்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெல்லா, ரஷ்ய மொழி, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு, சீன மொழி மற்றும் அரபு என ஒரே நேரத்தில் ஏழு மொழிகளில் பேசி கலக்கினார். 

பெல்லா வின் திறமை குறித்து நெட்டி சன்கள் பலரும் தங்களது பாராட் டுகளை தெரிவித்து வருகின் றனர்.

ஒன்றுக் கொன்று முரண்பட்ட 7 மொழிகளை பெரியவர்கள் கூட புரிந்து கொள்வது கடின மாகக் கருதப்படும் சூழலில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழி களைப் புரிந்து கொள்ளும் ஆற்ற லையும் பெல்லா பெற்றிருக் கிறார். 
ரஷ்யாவில் 7 வயதான பின்னரே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப் படுவது வழக்கம். 

அந்த வகையில் பள்ளிப் படிப்பைத் தொடங்வே இன்னும் 3 வருடங் கள் இருக்கும் நிலையில் பெல்லா வின் மொழியி யல் திறன் அனைவ ரையும் வியக்க வைத்து ள்ளது.

இது குறித்து பெல்லாவின் தாய் யூலியா கூறுகை யில், அவருக்கு 2 வயது இருக்கும் போது ரஷ்ய மொழி மற்றும் ஆங்கில மொழி யினை கற்றுக் கொடுத்த தாகத் தெரிவி த்தார். 
இதை யடுத்து மொழிகளைக் கற்றுக் கொள்வதில் பெல்லா காட்டிய ஈடுபாடு காரண மாக மேலும் சில மொழிகளை அவருக்குக் கற்றுக் கொடுத்த தாகக் கூறினார்.
Tags:
Privacy and cookie settings