செல்போனை சர்வீசுக்கு கொடுத்ததால் விபரீதம் !

கேரள மாநிலம் மலப்புரம் மாவடத்தைச் சேர்ந்த மாணவியை மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்போனை சர்வீசுக்கு கொடுத்ததால் விபரீதம் !
கொழிஞ்சாம் பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 26). இவர் எடக்கரையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் நவ்சாத்தின் செல்போன் கடைக்கு சென்றார். தனது செல்போன் பழுதாகி விட்டது சரிசெய்து தாருங்கள் என்று கூறி கொடுத்து விட்டு சென்றார்.

செல்போனை நவ்சாத் சோதனை செய்து பார்த்த போது மாணவி தனது உருவத்தை படு கவர்ச்சியாக பலவித கோணங் களில் செல்பி எடுத்து வைத்தி ருந்தார்.

அதனை தனது செல்போனு க்கு நவ்சாத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்தார். செல்போனை வாங்க வந்த மாணவி யிடம் நீ எடுத்துக் கொண்ட கவர்ச்சி படங்கள் எனது செல்போனில் பதிவு செய்து விட்டேன்.
எனது ஆசைக்கு இணங்கி னால் அவைகளை அழித்து விடுகிறேன். இல்லை என்றால் சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். 

அதிர்ச்சி யடைந்த மாணவி நவ்சாத்தின் மிரட்டுலுக்கு பணிந்தார். அதன்படி செல்போன் கடையிலேயே சிறுமியை நவ்சாத் பாலியல் பலாத் காரம் செய்தார். 

3-வது நாளாக நவ்சாத் வற்புறுத்திய போது இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி யடைந்த பெற்றோர் நவ்சாத்திடம் சென்று எனது மகளை திருமணம் செய்து கொள். 

இல்லை யென்றால் போலீசில் புகார் செய்து விடுவோம் என்று எச்சரித்தனர். மிரட்டலுக்கு பயந்த நவ்சாத் திருமணத் துக்கு சம்மதித்தார். அதன்படி திருமண ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வந்தன.
இந்நிலை யில் தனக்கு நவ்சாத்தை பிடிக்க வில்லை. இந்த திருமணத் தில் எனக்கு விரும்பம் இல்லை என்று சிறுமி பெற்றோரி டம் கூறினார். 

ஆனால் பெற்றோர் அதை கேட்காமல் திருமண வேலையில் ஈடு பட்டனர். சுதாரித்துக் கொண்ட சிறுமி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரிய ரிடம் கூறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இது குறித்து மலப்புரம் குழந்தைகள் காப்பக அதிகாரிக்கு தகவல் தெரிவி த்தார். சிறுமியை மீட்ட அதிகாரிகள் காப்பகத் தில் வைத்து சிறுமியை சோதனை செய்தனர்.

அப்போது சிறுமி பாலியல் பலாத்த காரம் செய்யப் பட்டது உறுதி யானது. குழந்தை கள் காப்பக அதிகாரி கள் மற்றும் தலைமை ஆசிரியர் இது குறித்து மலப்புரம் போலீசில் புகார் செய்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்கு பதுங்கி யிருந்த நவ்சாத்தை இன்று மதியம் கைது செய்தனர்.

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று ள்ளனர். பெற்றோரும் கைதாவர்கள் என்று தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings