நடிகை ரூபா கங்குலி ராஜ்யசபா எம்.பி. !

புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான மகாபாரதத்தில் திரௌபதியாக நடித்த நடிகையும் பாஜக பிரமுகருமான ரூபா கங்குலி மாநிலங்கவை எம்பி பதவிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார். 
நடிகை ரூபா கங்குலி ராஜ்யசபா எம்.பி. !
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகவைச் சேர்ந்த சித்து, சமீபத்தில் தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவை விட்டும் அவர் வெளியேறி விட்டார். 

சித்து வகித்த எம்பி பதவி காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு தற்போது ரூபா கங்குலியை, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரூபா கங்குலி. இவர் கடந்த 1988ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரௌபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர். 

பல இந்தி மற்றும் வங்காள மொழி நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார்.
Tags:
Privacy and cookie settings