இனி ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வர் !

மருத்துவ மனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள்
இனி ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வர் !
மூத்த அமைச்சர் களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப் படும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். 

அவர் நீண்ட காலம் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவ மனை கூறி யுள்ளது.

இதை யடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வருகிறது. 

அண்மை யில் அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி யிடம் ஆளுநர் வித்யாசகர் ராவ் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.

இலாகாக்கள் பகிர்வு
ஆனால் இதற்கு அமைச்சர் கள் இருவரும் ஒப்புக் கொள்ள வில்லை. மாற்றாக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள இலாகாக்களை மூத்த அமைச்சர் கள் பகிர்ந்து கொள்கிறோம் எனவும் ஆளுநரிடம் கூறப்பட் டுள்ளது.

ஓபிஎஸ், எடப்பாடி

அதாவது தற்போது ஜெயலலிதா வசம் பொது நிர்வாகம், உள்துறை உள்ளிட்ட இலாகாக்கள் உள்ளன. இவற்றை மூத்த அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பகிர்ந்து கொள்ளப் படக் கூடும் என தெரிகிறது.

யார் தலைமையில் கேபினட்?

அதே நேரத்தில் அமைச் சரவை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்? அரசாங்கத்தை வழி நடத்துவது யார் என்ற கேள்வியும் எழுகிறது. 
இனி ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வர் !
இதற்கு முன்னர் முதல்வராக இருந்த அண்ணாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதும் எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதும் நெடுஞ் செழியன் தான் அரசாங்கத்தை வழி நடத்தினார். 

அவர் தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை வகித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி...

அதேபாணியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசாங்கத்தை வழி நடத்த மன்னார்குடி தரப்பு திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதா உடல் நிலை உள்ளிட்ட ஆட்சி, கட்சி விவகார ங்கள் அனைத்துமே மன்னார்குடி தரப்பு எடப்பாடி பழனிச் சாமியி டமே விவாதி க்கிறது. ஓ பன்னீர் செல்வத்தி டம் எதனையும் பகிர்ந்து கொள்வ தில்லையாம். 
இதனால் எடப்பாடி பழனிச்சாமி க்கே அரசை வழி நடத்தும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். வழக்கம் போல அமைச்சரவை யில் 2-வது இடத்தில் ஓ. பன்னீர் செல்வம் தொடருவார் என்கின்றன அதிமுக வட்டார ங்கள்.
Tags: