யானைகளை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !

உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது. தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போதே வாசனை மூலம் தெரிந்து கொள்ளும்.
யானைகளை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !
யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும். ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள் தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். 

கடைசி நேரம் பல் விழும் போது சரியாக சாப்பிடாது. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும். 
யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும். 
ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். 

அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித் தான் காத்துக் கொள்ளும்.

யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டு ஊசியை கூட எடுத்து விடும். யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர் வாழும். யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.
யானைகளை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !
பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானை தான்.

பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.
நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் குட்டி போடும், அதிசயமாக சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

24 மணி நேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டு விடும். யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. 

மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான். தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானை.
Tags: