குழந்தையை விற்ற மருத்துவமனை !

பிரசவக் கட்டணத் துக்காக பிறந்த குழந்தையைத் தாயிடம் விலைபேசி, மற்றொரு தம்பதியினரிடம் விற்ற தனியார் மருத்துவமனை பற்றிய தகவல் அதிர்ச்சிய ளிக்கிறது.
குழந்தையை விற்ற மருத்துவமனை !
திருவொற் றியூர் ஈசானியக் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் (3௦), நித்யா (25). இவர் களின் சொந்த ஊர் தேனி. கடந்த 2௦1௦ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 

இவர்களுக்கு ஜெய சூரியா என்ற மகன் உள்ளார். கட்டடத் தொழிலாளியான ஜெயராமுக்கு சில மாதங்களாக சரிவர வேலை இல்லாத காரணத்தால் கணவன் - மனைவி க்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குடும்ப வாழ்க்கை யை நடத்து வதற்கு அக்கம் பக்கத்தின ரிடம் அதிக வட்டிக்குப் பணம் வங்கி செலவு செய் துள்ளனர். பின்னர் கடன் கொடுத்த வர்கள் பணத்தை கொடுக் குமாறு கேட்டு நெருக்கடி கொடுத் துள்ளனர்.

கடன் தொல்லை தாங்காமல் ஜெயராம் வீட்டை விட்டு சென்று விட்டார். அப்போது நித்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்தார். இதைய டுத்து கடந்த மாதம் 1௦ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவொற்றியூர் எல்லை யம்மன் கோயில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பிரசவத்துக்காக நித்யா அனுமதிக்கப் பட்டுள்ளார். 
அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், மருத்துவ மனைக்குச் செலுத்த நித்யாவிடம் பணம் இல்லை.

நித்யா வின் நிலையை அறிந்த மருத்துவ மனையின் நிர்வாகி, மருத்துவர் மகா லட்சுமி தன்னிடம் சிகிச்சை க்கு வந்த சுரேஷ் குமார் - லதா தம்பதியி னரிடம் இந்த விஷய த்தைக் கூறியுள்ளார். 

லதாவுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதையடுத்து நித்யாவிடம் ரூ.85 ஆயிரத்து க்குக் குழந்தையை விலைபேசி லதா தம்பதியரிடம் குழந்தையை விற்றுள்ளார் மருத்துவர் மகாலட்சுமி. 

இதில் அவர் ரூ.35 ஆயிரத்தை நித்யா வின் மருத்துவச் செலவுக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.5௦ ஆயிரத்தை நித்யாவிடம் கொடுத்து ள்ளார்.

இந்நிலை யில் கடந்த சில தினங்களு க்கு முன் விட்டுச் சென்ற கணவர் ஜெயராம், குழந்தை யைப் பற்றி நித்யா விடம் விசாரி த்துள்ளார்.
அப்போது கடன் தொல்லை காரண மாக குழந்தையை விற்று விட்டதாகத் தெரிவித் துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த ஜெயராம் குழந்தையை திரும்ப வாங்கு மாறு வலியுறுத் தியுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் சரவணன், மருத்துவர் மகா லட்சுமி, குழந்தை யை விலைக்கு வாங்கிய லதா ஆகியோரி டம் குழந்தை யைத் திரும்பத் தரும்படி கேட்டுள்ளனர். 

மேலும், லதாவிடம் வாங்கிய பணத்தை சிறுசிறு தொகையாக திரும்பத் தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால், இவர்களது கோரிக் கையை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில் நேற்று திருவொற் றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் அதிகாரி பிரகாஷ், சம்பந்தப் பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 
மேலும், குழந்தையை மீட்டு காவல் துறை யினர் அங்குள்ள ஒரு காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர். 

மருத்துவ மனைகள், மருத்துவச் சேவையை செய்வதில்லாமல் இம்மாதிரி யான சட்டத்துக்குப் புறம்பான செயல்களிலும் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது என்று பொது மக்கள் கூறினர்.
Tags:
Privacy and cookie settings