ஜி.பி.ஆர்.எஸ். என்பது? | GPRS. means?

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio Service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப் பட்டது. மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலை வரிசை களைப் பயன் படுத்தியே இயங்கு கின்றன.


ஜி.எஸ்.எம் வகை (GSM global system for mobile communications) மொபைல் போன் களைப் பயன் படுத்து வோருக்கான 2ஜி மற்றும் 3ஜி சிஸ்டங் களில் இந்த தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.

ஜி.பி.ஆர்.எஸ். மூலம் நொடிக்கு 56 முதல் 114 கிலோ பிட் வரையி லான டேட்டா வினை அனுப்பவும் பெறவும் முடியும்.

இந்த வகை டேட்டா பரிமாற்ற த்தினை, மெகா பைட் அளவிலேயே கணக் கிட்டு கட்டணம் வசூலிக் கிறார்கள். 

2ஜி செல்லுலர் சிஸ்டம், ஜி.பி.ஆர்.எஸ். சிஸ்ட த்துடன் இணைந்து செயல் படுகையில், அதனை 2.5ஜி என அழைக் கின்றனர். 

மொபைல் தொழில் நுட்பத்தில், 2ஜி மற்றும் 3ஜி பயன் பாட்டிற்கு இடையே இது கருதப் படுகிறது. இந்த சிஸ்டங் களில் மட்டுமே ஜி.பி.ஆர்.எஸ். பயன் படுத்தப் படுகிறது.
Tags: