தீபாவளி முதல் ஆன்லைனில் ரேஷன் கார்டு !

புதிய ரேஷன் கார்டுகளை ஆன் லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறையை தீபாவளி முதல் அமல் படுத்த உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்து ள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டு களை விண்ண ப்பித்து, 
தீபாவளி முதல் ஆன்லைனில் ரேஷன் கார்டு !
60 நாட்களு க்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப் படும் திட்டம் நடை முறையில் உள்ளது. ஆனால், பல மாதங்கள் ஆனாலும் ரேஷன் கார்டு வழங்கப்படு வதில்லை 

என்ற புகார்கள் எழுந்து வருகிறது. இதனை கட்டுப் படுத்தவும், விரை வாக ரேஷன் கார்டு பெறவும் இணைய தளம் மூலம் விண்ணப் பிக்கும் முறையை தமிழக உணவுத் துறை திட்ட மிட்டுள்ளது.

இத்திட்ட த்தை வரும் தீபாவளி முதல் அமல் படுத்த உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்து ள்ளது. www.tnpds.com என்ற இணைய தளத்தில் புதிய ரேஷன் கார்டை விண்ணப்பி க்கலாம்.
அதில் கேட்கப் பட்ட விபரங் களை பூர்த்தி செய்து குடும்பத் தலை வரின் புகைப் படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

பின் குடும்ப உறுப்பினர் களின் பெயர் களையும், கேட்கப்பட் டிருக்கும் ஆவணங் களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு வகை, காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்வி களும் இதில் கொடுக்கப் பட்டுள்ளது. 

இதன் பின் விண்ணப் பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப் பட்டதற் கான அடையாள எண் வரும். இதன் மூலம் ரேஷன் கார்டு நிலவர த்தை தெரிந்து கொள்ள முடியும்.
Tags: