ஆசிய விவகாரங்களில் தலையிடாதீர்.. சீனா !

தென் சீனக்கடலில் தங்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்து உள்ளது.
ஆசிய விவகாரங்களில் தலையிடாதீர்.. சீனா !
தென்சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பை னஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளு க்கு இடையே மோதல் நடந்து வருகிறது.

இதனால் தென்சீனக் கடலை சுற்றி மணற் கற்களைக் கொண்டு செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக் கைக்கு அமெரிக்க போன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாங் வான் குவான் தெற்காசிய விவகாரங்களில் அமெரிக்க தொடர்ந்து தலையிட்டு வருவதை சீனா எச்சரிக்கிறது. 
அமெரிக்கா தனது அதிகாரத்தை தெற்காசியப் பகுதிகளில் செலுத்த முயற்சி செய்து வருகிறது.

மேலும், அமெரிக்கா ராணுவ பலத்தைக் கொண்டு பிற நாடுகளுடன் ராணுவ உடன் படிக்கைகளையும், பொருளாதார உடன்படிக்கை களையும் வலுப் படுத்தி வருவதை சீனா கவனித்து வருகிறது என்றார்.
Tags:
Privacy and cookie settings