இந்தியா முழுவதும் பயணமாகும் கும்பகோணம் வாழை நார் | Banana fiber traveled through India, Kumbakonam !

மாலை கட்ட பயன் படுத்தப்படும் வாழை நார், கும்பகோணம் பகுதி யில் இருந்து சென்னை, பெங்க ளூரு, குஜராத் என இந்தியா வின் பல்வேறு பகுதிகளு க்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட த்தில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை பயிரிடப் படுகிறது. குறிப்பாக திருவையாறு, சுவாமி மலை, கும்பகோணம், பட்டீஸ் வரம் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றின் படுகை மற்றும் கிளை ஆறுகளின் படுகை களில் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப் பட்டுள்ளது.

இலைக்காக, பழத்துக் காக என இருவித தேவைக்காக விவசா யிகள் வாழை பயிரிட்டு வருகின் றனர். இதில், வாழை இலை அறுவடை அல்லது வாழைத் தார் வெட்டும் பணி முடிந்ததும், வாழை மரத்தில் கிடைக்கும் நாருக்காக வாழை மரங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுக்கின்றனர்.

தொழிலா ளர்களின் உதவியுடன் வாழை மரத்தில் இருந்து நாரைப் பிரித்தெடுத்து நூறு நார்கள் கொண்ட கட்டா கக் கட்டி, அவற்றை இந்தியா வின் பல்வேறு பகுதிகளு க்கும் விற்பனை க்காக அனுப்பி வைக் கின்றனர்.

இதுகுறித்து, வாழை நார் வியாபார த்தில் ஈடுபட்டுள்ள வலை யப்பேட்டை சிவசங்கரன் கூறிய தாவது: “கும்பகோணம் பகுதியில் பயிரிடப் படும் வாழை மரங்களில் இருந்து 

அதிக அளவு நார் கிடைக் கும். வாழை இலை அறுவடை, வாழைத்தார் வெட்டும் பணி முடிந் ததும், அந்த வயலை நாங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத் துக்கொள்வோம்.

பின்னர், ஒவ்வொரு வாழை மரமாக வெட்டி, அதில் இருந்து நாரை உரித்து அதே இடத்தில் காய வைப்போம். 2 அல்லது 3 நாட்கள் காய்ந்த பின்னர் வாழை நாரை கட்டுகளாகக் கட்டி சென்னை, பெங்களூரு, குஜராத் உட்பட இந்தியா வின் பல்வேறு பகுதிகளு க்கும் அனுப்பி வைப்போம்.

பூத்தொடுப் பதற்கு, மாலை கட்டுவ தற்குப் பயன்படும் இந்த வாழை நாரை அந்தந்த பகுதிக ளில் உள்ள வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இதற்காக உள்ளூ ரில் உள்ள வியாபாரிகள் மூலம் இந்தியா வின் பல்வேறு பகுதி களுக்கும் வாழை நார் கட்டுகளை நாங்கள் அனுப்பி வைக்கி றோம்.

கும்பகோணம் வாழை நார் என்றால் அதற்கென தனி மவுசு உண்டு. இந்த வாழை நார் உரிக்கும் தொழிலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு ள்ளனர். இதில், எங்களுக்கு ஓரளவு வரு மானமும் கிடைக்கிறது’’ என்றார்.
Tags: