எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை ஏன்? காரணம் இது தான் !

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க திடீரென எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வந்திருப்பதன் பின்னணியில் பரபரப்பு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 
எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை ஏன்? காரணம் இது தான் !
முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு 2 வாரங்கள் ஓடி விட்டன. 

ஆரம்பத்தில், ஜெயலலிதா வுக்கு காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல் சோர்வு என்று தான் மருத்துவமனை நிர்வாகம் சொல்லிக் கொண் டிருந் தது. 

ஆனால், மருத்துவமனை நிர்வாகமே இறங்கி வந்து, முதலமை ச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுப் பிரச்னை என்று சொல்லும் அளவுக்கு அதன் அறிக்கைகள் மாறி உள்ளன.

லண்டனிலி ருந்து, டாக்டர் ரிச்சர்ட் பியெல் வர வழைக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென இப்போது எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து மூன்று சிறப்பு நிபுணர்கள் வர வழைக்கப் பட்டுள்ளனர். 

அவர்களில் டாக்டர் கில்நானி, நுரையீரல் சிகிச்சைக் கான சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா, 

மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக் கான சிறப்பு மருத்துவர். இவர்களுடன் இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ் நாயக்கும் வந்துள்ளார். 
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் மற்றும் அவரது மற்றொரு சக லண்டன் டாக்டரின் சிகிச்சை யைத் தாண்டி, தற்போது எய்ம்ஸ் டாக்டர்களை வர வழைக்க வேண்டிய நோக்கம் முதல்வரின் உடல் நிலை மட்டும ல்ல, 

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மனுவும் தான் என்கிறா ர்கள். ஜெயலலிதா உடல்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்ற த்தில் டிராபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்தார். 

மனுவை உடனடியாக விசாரணை க்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி, கடந்த 3-ம் தேதி நீதிபதிகளிடம் முறையிட்டார். 

அப்போது, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். 

அதில், முதலமைச்சரின் உடல் நிலை பற்றி வெளிப் படையாகப் பொது மக்களுக் குத் தெரிவிக்க வேண்டிய கடமை, அரசாங் கத்துக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டனர். 
ராமசாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனாலும் கூட, இந்த விவகாரத்தை யாராவது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துப் போக வாய்ப்புள்ளது. 

அப்படிப் போகும் போது, உச்ச நீதிமன்றம், திடீரென, ஒரு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, முதல்வர் உடல் நிலையைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கலாம். 

அப்படி நடந்தால், எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்களைத் தான் நாட வேண்டும்.

இதில் இருந்து தப்புவதற்காகவே, அப்போலோ மருத்துவ மனையும், அரசாங் கமும் முன் கூட்டியே எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்களை அழைத்து விட்டது என்றும் சொல்லப் படுகிறது. 

ஏனெனில் இப்போது எய்ம்ஸ் மருத்துவ மனையில் தங்களு க்கு பழக்கமான வர்களை மருத்துவர் களாக அமர்த்திக் கொள்ள ஜெயலலிதா தரப்புக்கு வாய்ப்பு உள்ளது. 

உச்சநீதி மன்றமே ஒரு குழுவை அமைத்தால், அந்த டாக்டர்கள் மூலம், ரகசியங்கள் அம்பல மாகும் வாய்ப் புள்ளது. 
எனவே, மதுல்வர் உடல்நிலை குறித்த ரகசியங்களை அப்படியே பாதுகாத்து, அப்பல்லோ அறிக்கை மூலம் மட்டுமே மக்களிடம் தொடர்பு கொள்ள 

ஜெயலலிதா தரப்பு முடிவெடுத்து எய்ம்ஸ் மருத்துவர்களை முன் கூட்டியே வரவழைத் துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings