அமெரிக்காவில் விருது வாங்கிய தமிழக மீனவ பெண் !

அமெரிக்காவில் தமிழச்சி ஒருவருக்கு கிடைத்த விருது அங்கீகாரத்தால் ராமநாதபுர மாவட்டமே சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே சின்னப்பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி மூர்த்தி,
அமெரிக்காவில் விருது வாங்கிய தமிழக மீனவ பெண் !
மன்னார் வளைகுடா, தேசிய கடல் பூங்கா அருகில், கடல்பாசி அறுவடை செய்யும் தொழில் செய்யும் இவர் ராம நாதபுரம் மீன்பிடி தொழிலாளர் சங்க நிர்வாகியா கவும் இருக்கிறார். 

இவருக்கு தான் கடல்வள பாதுகாப்புக்காக, அமெரிக்க நாட்டின், சீகாலஜி விருது, வழங்கி கவுரப்படுத் தியுள்ளது. 

தமிழக மீனவப் பெண்ணான லட்சுமி மூர்த்திக்கு கிடைத்துள்ள விருது தான் இப்போதைய ராமநாதபுர மக்களின் சந்தோசம்.

கடல் மற்றும் கடற்கரை சுற்றுச் சூழலை பாதுகாக்க, லட்சுமி மூர்த்தி தொடர்ந்து பல நடவடிக் கைகள் எடுத்து வந்தார். 

இதற்காக இவருக்கு அமெரிக்க நாட்டின், ‘சீகாலஜி’ என்கிற கடல் வள பாதுகாப்பு ஆய்வு அமைப்பின், ‘சிறந்த மகளிர் விருது’ வழங்கப் பட்டுள்ளது.

கடல் வள பாதுகாப்பு முயற்சியில், உலகம் முழுவதும் ஈடு பட்டுள்ள தனி நபர்களின் தகவல் களை சேகரித்த இந்த அமைப்பு, சர்வதேச அளவில், லட்சுமி மூர்த்தியை தேர்வு செய்து ள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகா ணத்தில், கடந்த 8ம் தேதி நடந்தது. ‘சீகாலஜி’ அமைப்பின் நிறுவனர் பால் ஆலன் காக்சி டமிருந்து, 

அமைப்பின் துணைத் தலைவர் கென் முர்டாக், நிர்வாக இயக்குநர் டுனே சில்வர்ஸ்டன் ஆகியோர் முன்னிலையில் லட்சுமி மூர்த்தி விருதை பெற்றுக் கொண்டார். விருதுடன், 65 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத் துள்ளது. 
நேற்று, சென்னை திரும்பிய அவரை, தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ உள்ளிட்ட, மீனவ சங்க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். 

விருது பெற்ற லெட்சுமி இன்று தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப் பட்டுள்ளது.

ஆனந்த கண்ணீருடன்

விருது பெற்ற லட்சுமி மூர்த்தி, கடல் வளம், சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு, இரண்டு மாத விடுப்பு விட்டும்; ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கடல் பாசி எடுக்கிறோம்.

எனக்கு கிடைத்த இந்த அமெரிக்க விருது, தமிழக மீனவப் பெண்க ளுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்; விருது கிடைத் ததை நினைத்தால் மிகுவும் மகிழ்ச் சியாக இருக்கிறது. 

அந்த தருணத்தை நினைத்தால் இப்போது மெய் சிலிர்க்கிறது என ஆனந்த கண்ணீர் விட்டார்.... ப.இந்திரா பிரியதர்சன்
Tags: