எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை.. திருநாவுக்கரசர் !

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்தன திவேதி இதனை அறிவித்தார். 
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை.. திருநாவுக்கரசர் !
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 4 மாதங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து விலகினார். 

இதனை யடுத்து அப்பதவிக்கு யாரும் நியமிக்கப் படாமல் காலியாக இருந்து வந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக திருநாவுக் கரசரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. 

சு. திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலை களில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற் றுள்ளார். 

எம்.ஜி.ஆர். அமைச் சரவையில் இளம் அமைச்சராக இடம் பெற்று எம்.ஜி. ஆரின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் திருநாவுக்கரசர்.
திறமையான அமைச்சராக அறியப்பட்ட திருநாவுக்கரசருக்குப் பலமுகங்கள். அரசியல் வாதியாக, திரைப்பட விநியோக ஸ்தராக, நடிகராகவும் கூட அசத்தியவர் திருநாவுக் கரசர். 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் தனி அணி உருவான போது ஜெயலலிதா வின் தலைமையை ஏற்றவர் திருநாவுக்கரசர். 

ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக இவரும், கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனும் அழைத்துச் சென்றது வரலாறு.

ஜெயலலிதாவின் குட்புக்

ஜெயலலிதா வின் நட்பு வட்டாரத்தில் முக்கிய இடத்தில் இருந்த திருநாவுக் கரசர் பின்னர் படிப் படியாக அதிலிருந்து விலக்கப் பட்டார். ஒரு கட்டத்தி்ல் ஓரம் கட்டப்பட்டு கட்சியை விட்டும் நீக்கப் பட்டார். 
பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுக வைத் தொடங்கி நடத்தி வந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அதை யாருமே அப்போது எதிர் பார்க்க வில்லை. 

ஆனால் சேர்ந்த வேகத்தி்ல் மீண்டும் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார்.

பெயர் மாற்றம்

2002ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைவதற்கு முன்பு திருநாவுக்கரசு என்ற தனது பெயரை திருநாவுக் கரசர் என்று மாற்றிக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான அமைச் சரவையில் இணை அமைச்சராக இடம் பெற்றார். 

ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அறந்தாங்கியின் ஆஸ்தான எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி தான் திருநாவுக் கரசரின் ஆஸ்தான தொகுதியாக விளங்கியது. அத்தொகுதியில் தொடர்ந்து பலமுறை வென்று சாதனை படைத்தார். 
எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை.. திருநாவுக்கரசர் !
அங்கு அவர் அல்லது அவர் நிறுத்தும் ஆட்கள் தான் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. 1977-ல் அதிமுக சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற சு. திருநாவுக் கரசர் சட்டப் பேரவைத் துணைத் தலை வரானார். 

தொடர்ந்து, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பிலும், வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் அமைச் சரவையில். 

அதன் பின் தொழில் துறை அமைச்சர், வீட்டு வசதி துறை அமைச்சர் என்று பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு அமைச்சர் பதவி வகித்தவர்.

தனிக்கட்சி தொடங்கிய திருநாவுக் கரசர்

1989 ஆம் ஆண்டில் அதிமுக (ஜெ) சார்பிலும் போட்டி யிட்ட திருநாவுக் கரசர் வெற்றி பெற்றார். இதன் பின்னர், அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கிய 
திருநாவுக் கரசர் 1991 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். 

கட்சியைக் கலைத்த திருநாவுக் கரசர், 1996 ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டி யிட்டு தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றார்.

தனிப்பட்ட செல்வாக்கு

திருநாவுக் கரசரின் தொடர் வெற்றிக்கு அவரது தனிப்பட்ட செல்வாக்கும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. 

எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய அவர், 1999 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச் சரானார். 

எனவே, 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அவரது ஆதரவாளர் ப. அரசனை எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார் திருநாவுக் கரசர். 

இந்த முறையும் திருநாவுக் கரசரின் செல்வாக்கால் ப. அரசன் வெற்றி பெற்றார். 

ஆனால், 2006 ஆம் ஆண்டில் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குழ. காத்த முத்து தோல்வியைத் தழுவியதுடன் நான்காம் இடத்தைத் தான் பெற முடிந்தது.
ராமநாதபுரம் எம்.பி தொகுதி

புதுக்கோட்டை எம்.பி. தொகுதி கலைக்கப் பட்டு அதில் இருந்த அறந்தாங்கி, ராமநாத புரத்துடன் இணைக்கப் பட்டது. இதனை யடுத்து 2009 ஆம் ஆண்டில் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியை

உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் திருநாவுக் கரசர். 

இதில், தனது சொந்த செல்வாக்கு உள்ள அறந்தாங்கி தொகுதியில் 30,000 வாக்குகள் பெற்று இரண்டா மிடத்தைத் தான் பெற்றார் அவர்.

கட்சி மேலிடத்தில் செல்வாக்கு

பாஜகவில் இருந்து விலகிய திருநாவுக் கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2011ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் 
கை சின்னத்தில் போட்டி யிட்டு தோல்வி யடைந்தார். 2014ம் ஆண்டு நடை பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டி யிட்டார்.   

ராமநாதபுர த்துக்கு ராகுல் காந்தியை பிரச்சாரம் செய்ய அழைத்து வந்து கட்சி மேலிடத் தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை திருநாவுக் கரசர் நிரூபித்தார்.

பல கட்சிகள் பல சின்னங்கள்

மத்திய, மாநில அமைச்சராக இருந்த சு.திருநாவுக் கரசர் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை ஆகிய 7 சின்னங்களில் போட்டி யிட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

காங்கிரஸ் தொண்டர் களின் இல்ல விழாக்கள் மட்டும் இன்றி யார் கூப்பிட் டாலும் அனைத்து நிகழ்ச்சிக ளிலும் பங்கேற்பவர். 
சுருக்கமாகச் சொன்னால் எந்த கோஷ்டியையும் சாராமல் மக்கள் செல்வாக்குடன் திகழ்பவர். 

இதனால் தான் கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள் அனை வராலும் விரும்பக் கூடியவராக திருநாவுக் கரசர் உள்ளார்.
Tags:
Privacy and cookie settings