வைரலாகும் மலையாளியின் பேஸ்புக் பதிவு !

கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது ஒரு சிறு கல் கூட விழாமல் பாதுகாத்துக் கொண் டுள்ளது 
பேஸ்புக் பதிவு
தமிழக காவல் துறை. இதற்காக டோல் கேட்டு களில், வாகனங் களை சேர்த்துக் கொண்டு கர்நாடக எல்லைக்குள் சென்று பத்திரமாக விட்டு திரும்பு கிறார்கள் போலீசார். 

தமிழக பதிவெண் லாரிகளை தேடி தேடி எரித்துக் கொண்டிரு க்கும் கன்னட அமைப்பி னரை கட்டுப் படுத்த அந்த மாநில போலீசார் தவறி விட்டது. 

ஆனால் தமிழக காவல் துறையோ, ஒரு சிறு கல் கூட கர்நாடக வாகனங்கள் மீது விழா மல் பாதுகாத்து, சட்டம், ஒழுங்கு கெடாமல் பார்த்துக் கொண்டு வருகிறது. 

எப்படி என்கிறீர்களா.. அது தான் டோல்கேட் பெட்ரோல். அதாவது டோல்கேட் டுகளில் இருந்து கர்நாடக எல்லை வரை பாதுகாப் பாக கொண்டு சென்று வாகனங் களை விட்டு வருகிறது காவல்துறை.

பேஸ்புக்கில் பதிவு


பெங்களூரில் பணியாற் றும் கேரளாவைச் சேர்ந்த ஜோயல் பிந்து என்பவர் இந்த அனுபவத்தை நெகிழ்ச்சி யோடு தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஓணம் விடுமுறை கழிந்து, மதுரை வழியாக பெங்களூர் செல்ல தனது கர்நாடக பதிவெண் காரில் ஜோயல் சென்று கொண்டிருந் ததாகவும், 

அப்போது தான் தமிழக காவல் துறையின் அர்ப்பணிப்பு உணர்வை பார்க்க முடிந்தது எனவும், ஜோயல் கூறியுள்ளார்.

சாமானி யருக்கும் எஸ்கார்ட்

கொல்லத்தி லிருந்து, மதுரை பைபாஸ் அருகே உள்ள டோல் கேட்டில் வண்டியை நிறுத்திய போது, அவரை ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபில் அணுகி வாகனத்தை ஓரமாக நிறுத்த சொல்லி யுள்ளார்.

காவேரி பிரச்னையால் அந்த வாகனத்துக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்க போலீஸ் பாதுகாப்புடந் தான் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத் தியுள்ளார். 

ஆனால் ஜோயலுக்கு ஒன்றுமே புரியவில் லையாம். சிஎம், பிஎம் என இன்றி சாதாரண ஒரு குடிமகனு க்கு போலீஸ் எஸ்கார்ட் பாதுகாப்பா.. என ஜோயல் ஆச்சரியத்தில் உறைந்து ள்ளார்.

இரண்டு கார்கள்

சிறிது நேரத்தில் கர்நாடகா பதிவெண் கொண்ட, மேலும் இரண்டு கார்கள் டோல்கேட்டில் சேர்ந்து ள்ளன. அதையடுத்து, காலை பத்து மணிக்கு அவர்கள் பயணம் ஆரம்பித் துள்ளது. 
மதுரை பைபாஸ் எல்லை தாண்டிய தும், போலீசார் திரும்பி விடுவார்கள் என்று தான், ஜோயல் நினைத் துள்ளார். 

ஆனால், போலீஸ் வாகனங்கள் ஒவ்வொரு செக் போஸ்ட்டி லும் நின்று, கர்நாடக பதிவெண் வாகனங் களைச் சேர்த்து அனுப்பிக் கொண்டே இருந்தன.

'எதுவும்' எதிர் பார்க்க வில்லை

இரவில் கர்நாடக எல்லைக்கு கார் வந்த போது, மொத்தம் 16 வாகனங் கள் சேர்ந்திருந் தனவாம். 

அத்தனை க்கும், மதுரை முதலே போலீஸ் ஜீப்பில் போலீசார் பாதுகாப்பு கொடுத்த படி பின் தொடர்ந்து வந்து ள்ளனர். 
வைரலாகும் மலையாளியின் பேஸ்புக் பதிவு


ஜோயல் தனது வாகனத்தை நிறுத்தி நன்றி தெரிவிக்க எண்ணி னாராம். 

ஆனால் அதை கூட எதிர் பார்க்கா மல் போலீஸ் ஜீப் விருட்டென மீண்டும் மதுரை நோக்கி பறந்ததாம்.... இது ஜோக் இல்லை. நிஜம்! என்று ஜோயல் நெகிழ்ச்சி யோடு கூறி யுள்ளார்.

மேலிட உத்தரவாம்

கடவுள் இவர்களைப் போன்ற வைராக்கி யம் மிக்க நல்ல மனிதர்களை நமக்குத் தந்து நம் நாட்டை 

இன்னும் பலப்படுத்து வார் என வேண்டிக் கொள்கிறேன் என்றும் ஜோயல் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட் டுள்ளார். 
கர்நாடக பதிவெண் வண்டி மீது ஒரு சிறு கல் விழுந்தாலும், கர்நாடக வாழ் தமிழர்களு க்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதால், 

உரிய பாதுகாப்பு அளிக்க மேலிடம் உத்தரவிட்டு ள்ளதாக போலீசார் தெரிவித்தனர் என்றும் ஜோயல் குறிப்பிட் டுள்ளார்.
வைரலாகும் பேஸ்புக் பதிவு

இந்த பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி யுள்ளது. இன்று காலை நிலவரப் படி 39 ஆயிரம் லைக்குகளை இப்பதிவு வாங்கி யுள்ளது. 18 ஆயிரத்து க்கும் அதிகமானோர் ஷேர் செய்து ள்ளனர்.
Tags: