ஆதார் இல்லாவிட்டால் ரயில் டிக்கெட் கிடையாது விரைவில் !

ஆதார் எண் சமர்ப்பித் தால் மட்டுமே ரயில் டிக்கெட் பெற முடியும் என்ற புதிய நடை முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. 
ஆதார் இல்லாவிட்டால் ரயில் டிக்கெட் கிடையாது விரைவில் !
பண்டிகைகள், தொடர் விடுமுறை தினங்களின்  போது ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பு தான். 

நள்ளிரவு முதல் இடம் பிடித்து வரிசையில் நின்றால் கூட சில நிமிடங்களில், ஏன்… நொடிகளில் கூட ரயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. 

ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி புரோக்கர் களும் இதற்கு காரணம். டிக்கெட் ஏஜென்ட்கள் புரோக்கர் களை வரிசையில் நிறுத்தி பல்வேறு பெயர்களில் டிக்கெட் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். 

இதை அவ்வப் போது ரெய்டு நடத்தி கட்டுப் படுத்தி னாலும், தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, புதிய நடை முறையை செயல் படுத்த ரயில்வே திட்ட மிட்டுள்ளது.
தற்போது உள்ள அடையாள சான்று களில், ஒருவருக்கு ஒரே சான்று என இருப்பது ஆதார் மட்டும் தான். போலி தயாரிக்க முடியாது. 

அப்படியே இருந்தாலும் ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடியாக கண்டு பிடித்து விட முடியும். 

எனவே, ஆதார் அட்டையை அடிப்படை யாக வைத்து டிக்கெட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது.

தற்போது நாடு முழுவதும் அசாம், மேகாலயா தவிர 105 கோடிக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை பெற்று ள்ளனர்.   

இது மட்டுமின்றி, நாள் தோறும் சுமார் 6 லட்சத்து க்கும் மேற்பட் டோருக்கு ஆதார் பதிவு செய்யப் படுகிறது. ஆதார் அடிப் படையில் தினமும் 60 லட்சத்துக்கு மேற்பட்ட பரிவர்த் தனைகள் நடக்கின்றன. 
ஆதார் வழங்கப் பட்டது முதல் இதுவரை சுமார் 241 கோடி பரிவர்த் தனைகள் நடந்து ள்ளன. மோசடி களையும் புரோக்கர்கள் அட்டகாசத் தையும் தடுக்க அரசிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஆதார் தான். 

எனவே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, கவுன்டரில் டிக்கெட் வாங்குவது, முன்பதிவு அல்லாத டிக்கெட் என எல்லாமே 

ஆதார் எண்ணை சமர்ப்பித்தால் தான் வாங்க முடியும் என்ற நடை முறையை ரயில்வே விரைவில் செயல் படுத்த இருக்கிறது. 

ஆதாரை எந்தெந்த வகையில் பயன் படுத்துவது என கொள்கை வரையறுக்கப் படுகிறது. இதில் ரயில் டிக்கெட்டு க்கும் கட்டாய மாக்க உத்தேசம் உள்ளது.

இதனால் புரோக்கர்கள் தொல்லை ஒழியும், உண்மையான பயணி களுக்கு டிக்கெட் கிடைக்கும். 

அநேகமாக வரும் டிசம்பரில் இருந்து அமல்ப டுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என ரயில்வே வட்டார ங்கள் தெரிவிக் கின்றன. 
ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங் களுக்கு ஆதார் எண் கட்டாய மாக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

இந்நிலையில் ரயில் டிக்கெட் களுக்கு எந்த வகையில் நடைமுறைப் படுத்தப் படும் என்பது தெரிய வில்லை.

முதியோர் சலுகைக்கும் கட்டாயம்

ஐஆர்சிடிசி தலைவர் ஏ.கே.மனோச்சா கூறுகையில், ‘‘மூத்த குடிமக்க ளுக்கு டிக்கெட் கட்டண சலுகை உண்டு. ஆண்கள் 40 சதவீதமும், பெண்கள் 50 சதவீதமும் கட்டண சலுகை பெறுகின்றனர். 

இது தவிர பல்வேறு பயணிகளுக்கும் சலுகை கட்டணம் உள்ளது. இதனால் ரயில் வேக்கு ஆண்டுக்கு ₹1,500 கோடி இழப்பு ஏற்படுகிறது. 

எனவே, ஆதார் இருந்தால் மட்டுமே மூத்த குடிமக்க ளுக்கு கட்டண சலுகை வழங்குவது எனவும், இதை டிசம்பரில் நடை முறைப்படு த்துவது எனவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 
ஆன்லைனில் ஒருவர் அதிகபட்சம் 6 டிக்கெட் மட்டுமே எடுக்கலாம். ஆதார் அடிப்படை யில் வரும் போது இது வரம்பு தேவையில்லை. ஏனெனில் இத தவறாக பயன்படுத்தப் படுகிறதா எனவும் கண்டறிய முடியும்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings