நல்ல கொழுப்பு ( HDL) அமிலங்கள் தரும் ஆபத்து !





நல்ல கொழுப்பு ( HDL) அமிலங்கள் தரும் ஆபத்து !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்து தான் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ, உடலிலுள்ள நல்ல கொழுப்பு எனப்படும் HDL க்கு பொருந்தும். 


இந்த்தனை காலமும் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு அமிலங்கள் மிகவும் கெடுதல் தரும். நல்ல கொழுப்பு அமிலங்களான HDL உடலுக்கு நல்லது தரும் என படித்திருப்பீர்கள். அல்லது கேள்விப் பட்டிருப்பீர்கள். 

அது உண்மை தான் என்றாலும் அதிகமான HDL உயிருக்கு ஆபத்தை தரும் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

பொதுவாக உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளும் கொலஸ்ட்ராலும் இதயத்தின் வால்வுகளில் படியும். இது இதய அடைப்புக்கும், இதய நோய்களுக்கும் காரணமாகும்.

ஆனால் இந்த நல்ல கொழுப்பானது (HDL) கெட்ட கொழுப்பு களை இதயத்தி லிருந்தும், ரத்த குழாய்களி லிருந்தும் வெளியேற்றி கல்லீரலுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. 

இதனால் இதயம் கொழுப்பிட மிருந்து பாதுகாக்கப் படுகிறது. இதய நோய், இதய அடைப்பு வராமல் காக்கிறது. இப்படி முந்தைய ஆய்வில் சொல்லி வந்தார்கள்.


ஆனால் இப்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதிகப் படியான நல்ல கொழுப்பு அமிலங்களும் இறப்பிற்கு காரணமாகிறது என தெரிய வந்துள்ளது.

அதிகப் படியான நல்ல கொலஸ்ட்ரால் சிறு நீரக செயலிழப்பிற்கு காரணமாகிறது என்று கூறுகிறார் மிசௌரியி லுள்ள வாஷிங்க்டன் மருத்துவ பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஜியாத் அலி.

இந்த ஆய்வில், சிறு நீரகத்திற்கும். நல்ல கொழுப்பு அமிலத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தனர், 

இதன் முடிவில், நல்ல கொழுப்பு அமிலங்கள் அளவிற்கு அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறுகின்றனர்.
Tags: