கால்கள் கொழ கொழ வென தொங்காமல் சதைப் பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகர மாகத் தான் இருக்கும். ஆனால் அப்படியான கால்கள் பெற நீங்கள் ஏதாவது முயற்சி எடுத்திருக் கிறீர்களா? 

கால்கள் அழகாய் இருந்தால் நல்ல ஆராக்கியமன உடல் நலத்தை பெற்றிருக் கிறீர்கள் என அர்த்தம் உங்கள் கால்கலிள் இருக்கும் அதிகப் படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப் பட்டிருக் கும் குறிப் புகள் உதவுகிறதா எனப் பாருங்கள்.

பளிச்சென்ற கால்கள் பெற :

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். விடாப்படி யான தழும்பு களும் மறையும்.

கோதுமை மாவு ஸ்க்ரப் :

கோதுமை மாவு சருமத்தை இறுக்கிப் பிடிக்கும். இதனால் அதிகப் படியான சதைகள் கட்டுப்படும். போதாதற்கு அழுக்கு களை நீக்கவும் சிறந்தது. 

1 டீஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால்களில் தேய்க்கவும். நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் டோனர் :

கால்களில் இருக்கும் சருமம் மென்மை யாக இருப்பதால் அதில் குளிர் காலத்தில் சதுர சதுரமாக வறண்டு போன கோடுகள் தெரியும். 

இதனை தவிர்க்க, ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சினால் நனைத்து கால் முழுக்க தடவுங்கள். இரவில் அவ்வாறு செய்து விட்டு படுக்கவும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

அவகாடோ எண்ணெய் :

கடைகளில் அவகாடோ எண்ணெய் விற்கும். அதனை வாங்கி கால்களில் தினமும் காலை மாலை என இரு வேளை தடவி வாருங்கள். மென்மை யான பளபள வென கால்கள் கிடைக்கும். 

வெங்காயச் சாறு : 

வெங்காயம் அல்லது வெங்காயச் சாறை எடுத்து கால்களில் தடவுங்கள். லெசாக சூடு உணர்ந்ததும் கால்களை கழுவ வேண்டும். இதனால் கால்களில் உண்டாகும் கருமை மறைந்து, பளிச்சிடும்.

புதினா சாறு :

புதினா சாறை எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை, சொர சொரப்பு நீங்கி, மென்மை யான கால்களைப் பெறுவீர்கள். முட்டிகளும் தேய்த்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ் + பால் :

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் சிறிது பால் கலந்து அதோடு சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கால்களில் தடவுங்கள்.

15 நிமிடம் கழித்து தேய்த்து கழுவினால். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கால்களில் உள்ள தேவையற்ற முடி உதிர்ந்து போய் விடும்.